Advertisment

redBus : கிறிஸ்துமஸ் வருது... அரசு பேருந்து டிக்கெட் கிடைக்க கஷ்டமா இருக்கா? உங்களுக்காக தான் இந்த வசதி

Book Tamil Nadu Govt Bus on redBus : தமிழக பேருந்துகள் எல்லாம் இப்போது ரெட் பஸ் ஆப்பில் வந்தாச்சு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Govt Bus on redBus

Tamil Nadu Govt Bus on redBus

Tamil Nadu Govt Bus Online Booking on redBus and Bus India : கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாளுக்கு நாள் பேருந்து டிச்கெட் பதிவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

Advertisment

சொந்த ஊருக்கு செல்பவர்கள் பலரும் அரசு பேருந்து SETC இணையத்தில் டிக்கெட்டுகளை பெற்று வருகிறார்கள். சிலருக்கு இந்த இணையத்தில் புக்கிங் செய்ய கடினமாக இருக்கும்போது தனியார் பேருந்துகளை நாடி செல்கின்றனர்.

ஆனாலும் அரசு பேருந்துகளில் இருக்கும் குறைந்த விலை அளவிற்கு தனியார் பேருந்துகளின் விலை இல்லை. இருப்பினும் அரசு பேருந்துகளில் டிக்கெட்டுகளை எளிமையாக பெற முடியாத காரணத்தினால் பலரும் விலை உயர்ந்த சில பேருந்துகளை நாடிச் செல்கின்றனர்.

Tamil Nadu Govt Bus Booking on redBus : ரெட் பஸ் செயலியில் தமிழக அரசு பேருந்து

எனவே பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில், ரெட் பஸ் செயலியுடன் இணைந்துள்ளது தமிழக அரசு போக்குவரத்து துறை. SETC இணையத்தில்  உடனடியாக டிக்கெட் பெற முடியாதவர்கள் இனி ரெட் பஸ் செயலி மூலம் அரசு பேருந்து டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.

சமீபத்தில் வெளியான தகவலின்படி, தமிழகத்தில் இருந்து புறப்பட்டு கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. தற்போதைய நிலவரத்தில், வெளியூர்களுக்கு செல்ல அரசு சுமார் 1000 பேருந்துகளையும், தென் தமிழக ஊர்களுக்கு செல்ல 250க்கும் மேற்பட்ட பேருந்துகளையும் இயக்கி வருகிறது.

IRCTC Goa Package: வெறும் 400 ரூபாய் இருந்தால் போதும்... முழு கோவாவை சுற்றிப் பார்க்கலாம்

ரெட் பஸ் செயலியில் மட்டுமல்லாது, இந்த வசதி பஸ் இந்தியா செயலியிலும் அறிமுகமாகியுள்ளது. இதனை அடுத்து, PayTM வசதியும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

ரெட் பஸ்-ல் அரசு பேருந்துகள் இணைந்திருந்தாலும், டிக்கெட் விலையில் மாற்றம் இல்லாமல், தனியார் பேருந்துகளை விட குறைந்த விலையிலேயே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment