Advertisment

கோவை: உரிமையாளரை தாக்கி காரை கடத்திய சிறுவன் சிக்கியது எப்படி?

ஆன்லைன் செயலி மூலம் கார் விற்பனை விளம்பரத்தை வைத்து கார் வாங்குவது போல் நாடகமாடி கார் உரிமையாளரை கழுத்தில் கூர்மையான ஆயுதம் தாக்கி காரை கடத்தியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
A boy who hijacked a car in Coimbatore was arrested

கோவையில் கார் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் கைது செய்யப்பட்டார்.

ஓ.எல்.எக்ஸ் ஆன்லைன் செயலி மூலம் கார் விற்பனை விளம்பரத்தை பார்த்து கார் வாங்குவது போல் வந்து கார் உரிமையாளரை தாக்கி கார் கடத்தலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் கைது.

Advertisment

கோவை கணபதியை சேர்ந்த வெங்கடேஷ் ஓ.எல்.எக்ஸ் மூலம் தனது ஹோண்டா அக்கார்டு காரை 22"ஆம் தேதி விளம்பரம் செய்தார்.

அதனைப் பார்த்த இரண்டு பேர் நேற்று முன்தினம் வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து வாகனத்தை ஓட்ட வேண்டும் எனக் கூறி வெங்கடேசையும் அழைத்துக் கொண்டு சத்தியமங்கலம் சாலையில் சென்றனர்.

அப்போது, பின்பக்க சீட்டில் இருந்த ஒருவர் வெங்கடேசனை தாக்கி அந்த காரை எடுத்துச் சென்றனர். இதற்கிடையில் அந்த காரை எடுத்துச் சென்ற அந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோவில்பாளையம் சந்தையில் காரை இயக்கி பொதுமக்கள் ஐந்து பேரை மேல் இடித்து விட்டு சென்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் கொண்டு வந்த இருசக்கர வாகன பதிவை வைத்து விசாரணை செய்தனர்

இதில் காரை கடத்திச் சென்றது மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து காரை பறிமுதல் செய்து, சிறுவனை கைது செய்த போலீசார் மற்றொரு நபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

ஆன்லைன் செயலி மூலம் கார் விற்பனை விளம்பரத்தை வைத்து கார் வாங்குவது போல் நாடகமாடி கார் உரிமையாளரை கழுத்தில் கூர்மையான ஆயுதம் தாக்கி காரை கடத்திய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment