Advertisment

புல்லட் நாகராஜன் மற்றொரு பெண் போலீஸ் அதிகாரியை மிரட்டும் ஆடியோ! விரைந்தது தனிப்படை

எங்கள் ஆள் மேல் கை வைத்தால் வேட்டையாடுவேன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புல்லட் நாகராஜன் ஆய்வாளருக்கு மிரட்டல்

புல்லட் நாகராஜன் ஆய்வாளருக்கு மிரட்டல்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி என ஏராளமான வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் 2006ல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அவ்வப்போது தூக்க மாத்திரைகளை உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் சிறைச்சாலையில் உடல் பரிசோதனை செய்ய வந்த டாக்டரிடம் தனக்கு தூக்க மாத்திரை வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் தான் அணிந்திருந்த சட்டையை கிழற்றி பெண் மருத்துவர் மீது வீசினார். இதையறிந்த மதுரை சிறைத் துறை பெண் எஸ்பி ஊர்மிளா காவலர்களை அனுப்பி நாகராஜனின் அண்ணனை அடித்துள்ளனர்.

இதனிடையே அவர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தன்னை எஸ்பி ஊர்மிளா அடித்ததை தம்பியிடம் கூற, உடனே எஸ்பி ஊர்மிளாவுக்கு போன் போட்ட புல்லட் நாகராஜன் மிரட்டல் விடுத்து பேசினார். 'அதிகாரியை எரித்து கொன்றது ஞாபகம் இருக்கிறதா? அடுத்து, உங்கள் மேல் லாரி ஏறும்' என மிரட்டல் விடுத்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பெண் அதிகாரியை புல்லட் நாகராஜன் மிரட்டியுள்ளார்.

பெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் போன் செய்து பேசிய புல்லட் நாகராஜன், "இனி யாரையும் நீங்க அடிக்கக் கூடாது. எங்கள் ஆள் மேல் கை வைத்தால் வேட்டையாடுவேன். யாரையும் கைது செய்து சட்டவிரோதமாக லாட்ஜில் வைத்து அடிக்கக் கூடாது" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

போலீஸாருக்கே பெரும் சவாலாக உள்ள புல்லட் நாகராஜனை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவை மிரட்டிய வழக்கில் ரவுடி புல்லட் நாகராஜை பிடிக்க 7 பேர் கொண்ட தனிப்படை தேனி விரைந்து உள்ளது. புல்லட் நாகராஜன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment