பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : மாணவர்கள் கிளர்ச்சி பரவுகிறது

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். 3-வது நாள் போராட்டம் LIVE UPDATES...

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். 3-வது நாள் போராட்டம் LIVE UPDATES…

பஸ் கட்டணம், தமிழ்நாட்டில் கடந்த 19-ம் தேதி மாலையில் திடீரென உயர்த்தி அறிவிக்கப்பட்டது. 25 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம், சாமானிய மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கியிருக்கிறது.

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் அறிவித்திருக்கின்றன. அதைவிட முக்கியமாக, பயணிகளும் பொதுமக்களும் ஆங்காங்கே தன்னெழுச்சியாக போராடத் தொடங்கியிருப்பதுதான். 3-வது நாளாக இன்று (22-ம் தேதி) தொடர்கிற போராட்டங்களின் LIVE UPDATES

பகல் 11.45 : திருவாரூர், அரியலூர், திருவண்ணாமலை என மாநிலம் முழுவதும் மாணவர்கள் கிளர்ச்சியாக பஸ் கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டம் பரவுகிறது.

பகல் 11.30 : பேருந்து கட்டணத்தை கண்டித்து அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

Bus Fare Hike, College Students Protest

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

காலை 10.45 : திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை போலீஸார் அப்புறப்படுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர். ‘பஸ் கட்டண உயர்வை அரசு வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்’ என இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கூறினர்

காலை 10.30 : பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையீடு செய்தார். அவரது முறையீட்டை அவசர வழக்காக ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், மனுவாக தாக்கல் செய்தால் தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்படும் என கூறியது.

காலை 10.00 : பஸ் கட்டண உயர்வை கண்டித்து சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா மேற்கொண்டிருக்கிறார்கள்.

காலை 9.30 : தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் 3000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

காலை 9.00 : திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை 7.30 மணி முதல் கல்லூரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் இணைந்து பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

 

×Close
×Close