தீபாவளியை கொண்டாட ஊருக்கு பஸ்ஸிலயா இல்லை பிளைட்லயா? : மக்களே முடிவு உங்க கையில் தான்…

Bus fares in Omni bus : மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ள நிலையில், ஆம்னி பஸ்கள், பயண கட்டணத்தை விமான பயண கட்டணத்திற்கு நிகராக உயர்த்தியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

By: Updated: October 14, 2019, 10:24:44 AM

தீபஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை கொண்டாட, மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ள நிலையில், ஆம்னி பஸ்கள், பயண கட்டணத்தை விமான பயண கட்டணத்திற்கு நிகராக உயர்த்தியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வாழும் மக்கள், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை என்பதால், மக்கள் ஆம்னி பஸ்களை நாடிவருகின்றனர். இதுதான் தக்க தருணம் என நினைக்கும் ஆம்னி பஸ்கள், இந்த பண்டிகைகளின் போது டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக ஏற்றிவிடுகின்றனர். மக்களும் வேறுவழியில்லாமல், அதிகவிலை கொடுத்து பயணம் செய்துவருகின்றனர்.

ஆம்னி பஸ்களில் அதிக விலை கேட்டால் புகார் அளிக்கலாம், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தும், அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாய் தெரியவில்லை. எடுத்திருந்தால் ஏன், அவர்கள் விமான டிக்கெட் அளவிற்கு ரேட்டை ஏத்தி விற்கப்போகிறார்கள்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும், ஆண்டுக்கு ஆண்டு சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை 200 வீதம் அதிகரித்து வரும் நிலையிலும், இந்த ஆம்னி பஸ்களும் தொடர்ந்து தாறுமாறாக விலையை ஏற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை – மதுரை விமான கட்டணம் – ரூ. 2,728

24ம் தேதி ஆம்னி பஸ் கட்டணம்

சென்னை – மதுரை – ரூ.1,500 லிருந்து ரூ.2,200

சென்னை – கோவை – ரூ.1,700 -2 ,400

சென்னை – திருநெல்வேலி – ரூ.2,000 – ரூ.2,500

மதுரையை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் முருகன் கூறியதாவது, மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், டிரைவர்களாகிய நாங்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம். சென்னை – திருநெல்வேலி- சென்னை தொடர்ந்து இரண்டு டிரிப் பார்க்க சொல்கிறார்கள். நாங்கள் உடலளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் பாதிக்கப்படுகிறோம். அதனால், அந்த டிரைவர் வேலையை விட்டுவிட்டதாக அவர் கூறினார்.

எரிபொருள் விலையுயர்வு உள்ளிட்ட காரணங்களால், தங்களால், 2 டிரைவர்கள் வைத்து வேலைவாங்கமுடிவதில்லை, நாங்கள் நஷ்டம் தான் அடைந்து வருவதாக ஆம்னி பஸ் உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Bus fares for diwali cost as much as flights from chennai to madurai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X