Advertisment

இடைத்தேர்தலுக்கு தயாரான தமிழகம்.. ஒரே நாளில் திமுக, அதிமுக கட்சிகள் வேட்புமனு தாக்கல்!

3ஆம் தேதி மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
byelection dmk admk congress candidates

byelection dmk admk congress candidates

byelection dmk admk congress candidates : தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டியில் ஏற்கனவே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கந்தசாமி, இயக்குனர் கவுதமன் உட்பட 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாங்குநேரியில் கடந்த கடந்த சனிக்கிழமை வரை நாங்குநேரியில் 12 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. அக்டோபர் 1-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

ஒரே நாளில் அதிமுக - திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரனிடம் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மத்திய மாவட்ட தலைவர் தசரதன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோரும் வந்திருந்தனர்.

அதே போல் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நா.புகழேந்தி தனது ஆதரவாளர்களுடன் சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாங்குநேரி :

திருநெல்வேலி நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் இன்று தாலுகா அலுவலத்தில் தேர்தல் அதிகாரி நடேசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இவரை தொடர்ந்து நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இன்று தாலுகா அலுவலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவேன் என்றும் உறுதியளித்தார்.

புதுச்சேரி காமராஜ் நகர் :

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளராக புவனா தேர்வு செய்யப்பட்டார். அதிமுக, பாஜக கூட்டணி ஆதரவோடு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில், கட்சி வேட்பாளரான புவனா இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஜான்குமார் இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்துக் கொண்டனர்.

.

Dmk Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment