தனியார் கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு... குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

கேன் வாட்டர் உற்பத்திக்கு ஜிஎஸ்டியில் விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரிக்கு எதிர்ப்பு

தனியார் கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளதால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கேன் வாட்டர் உற்பத்திக்கு ஜிஎஸ்டியில் விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக தனியார் கேன் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டம் தோறும் தனியார் வாட்டர் கேன் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை மற்றம் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் குடிநீருக்காக வாட்டர் கேனையே அதிகமாக நம்பியுள்ளனர். இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள் ஸ்ரைக்கில் ஈடுபடவுள்ளனர். இதன் காரணமாக, சென்னை மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

×Close
×Close