தமிழக காவல் துறை அப்பல்லோ நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறையினரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துடன் காவல்துறை தலைமை ஒப்பந்தம் செய்துள்ளதா அன்புமணி தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் கூற்றுப்படி, 2016-ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு மோசடியில் அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துக்கு தொடர்பு உள்ளது.அப்பல்லோ பயிற்சி நிறுவனத்தில் காவல் துறை சோதனையும் நடைபெற்றது.
அப்பல்லோ நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி 2020ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்
மு.க.ஸ்டாலின் ஊழல், மோசடி நிறுவனம் என்று குற்றஞ்சாட்டப்பட்ட அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துடன், அவரது ஆட்சியிலேயே, அந்த நிறுவனத்தில் சோதனை நடத்திய காவல்துறையே ஒப்பந்தம் செய்வது ஊழலுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமாக அமைந்துவிடாதா?
மு.க.ஸ்டாலின் அவர்களால் ஊழல், மோசடி நிறுவனம் என்று குற்றஞ்சாட்டப்பட்ட அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துடன், அவரது ஆட்சியிலேயே, அந்த நிறுவனத்தில் சோதனை நடத்திய காவல்துறையே ஒப்பந்தம் செய்வது ஊழலுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமாக அமைந்துவிடாதா?#CORRUPTION
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 29, 2022
தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் அப்பல்லோ நிறுவனத்தின் மீதான வழக்கு விசாரணைகள் நீர்த்துப் போகக்கூடும். எனவே, அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துடன் காவல்துறை செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil