காவிரி மேலாண்மை வாரியம் : புதுக்கோட்டையில் 5 கி.மீ நீண்ட மனித சங்கிலி, மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி திமுக - தோழமைக் கட்சிகள் மனிதச் சங்கிலி நடத்தினர். புதுக்கோட்டையில் ஸ்டாலின், தஞ்சையில் வைகோ கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி திமுக – தோழமைக் கட்சிகள் மனிதச் சங்கிலி நடத்தினர். புதுக்கோட்டையில் ஸ்டாலின், தஞ்சையில் வைகோ கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற தமிழ்நாட்டின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இது தொடர்பான செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகத்தில் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் கடந்த 16-ம் தேதி எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலி நடத்தினர். அதன் LIVE UPDATES

மாலை 6.00 : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற போராட்டத்தில் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் மத்திய அரசு உள்நோக்கத்துடன் நடந்து கொள்வதாக கூறினார்.

 Cauvery Management Board, DMK, All Party Human Chain Protest

சென்னை அண்ணா அறிவாலயம் அருகே மனித சங்கிலியில் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், சல்மா உள்ளிட்டோர்.

மாலை 5.45 : புதுக்கோட்டையில் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மாலை 5.25 : புதுக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட மனித சங்கிலியில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் தவிர பல்வேறு விவசாய சங்கங்களும் கலந்து கொண்டன. சுமார் 5 கி.மீ தொலைவுக்கு அவர்கள் அணிவகுத்து நின்றனர். திறந்த ஜீப்பில் சென்று அவர்களை ஸ்டாலின் பார்வையிட்டார்.

Cauvery Management Board, DMK, All Party Human Chain Protest

சென்னையில் மனித சங்கிலியில் துர்கா ஸ்டாலின், செல்வி ஆகியோர்.

மாலை 5.00 : வேலூரில் மனித சங்கிலியில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், மாவட்டச் செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மாலை 4.30 : சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு கனிமொழியுடன் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் சல்மா ஆகியோர் கைகோர்த்து நின்றனர்.

மாலை 4.10 : புதுக்கோட்டையில் ஸ்டாலின், தஞ்சாவூரில் வைகோ, சிவகங்கையில் கே.ஆர்.ராமசாமி, திருவாரூரில் முத்தரசன், சென்னையில் கே.பாலகிருஷ்ணன், கிருஷ்ணகிரியில் திருமாவளவன், திருச்சியில் ஜவாஹிருல்லா, பெரம்பலூரில் காதர் மொய்தீன் ஆகியோர் மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.

மாலை 4-00 : சென்னை, தேனாம்பேட்டையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் முன்பு திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் மனித சங்கிலி நடந்தது. அப்போது நிருபர்களிடம் பேசிய கனிமொழி, ‘தளபதி அறிவிப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். பாஜக-அதிமுக இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றால், அவற்றால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. தமிழர்களை நோக்கி சுடுவதாகத்தான் அந்தத் துப்பாக்கிகள் இருக்கின்றன’ என்றார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close