சேலம் ரயில் கொள்ளை சம்பவம் : குற்றவாளிகள் 15 பேரை அடையாளம் கண்டனர் காவல்துறையினர்

கொள்ளைக் கும்பலின் தலைவன் மத்தியப் பிரதேச சிறை ஒன்றில் இருப்பதாக தகவல்.

By: October 15, 2018, 8:32:16 AM

சேலம் ரயில் கொள்ளை சம்பவம் : கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான சுமார் 342 கோடி ரூபாய் அந்த ரயிலில் கொண்டு வரப்பட்டது. அவை அனைத்தும் ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் ஆகும்.

அந்த செய்தியை அறிந்த மர்ம கும்பல் ஒன்று, ரயிலின் மேற்கூரையில் இரண்டடிக்கு ஒன்றரை அடி துளை போட்டு உள்ளே இறங்கி 5.75 கோடி ரூபாயினை கொள்ளையிட்டு சென்றனர் மர்ம நபர்கள்.

அந்த ரயில் 9ம் தேதி காலை எழும்பூர் ரயில் நிலையம் வந்த பின்பு தான் பணம் கொள்ளை போனது கண்டறியப்பட்டது. இது தொடர்பான வழக்கினை இரண்டு வருடம் நடத்தியும் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. மேலும் படிக்க : ஓடும் ரயிலில் நடந்த மெகா கொள்ளை: இஸ்ரோ உதவியுடன் கொள்ளையர்களை கைது செய்த சிபிசிஐடி

சேலம் ரயில் கொள்ளை சம்பவம் – வழக்கில் உதவிய நாசா

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சகத்தின் மூலமாக நாசாவின் உதவியை நாடியிருந்தது தமிழக சிபிசிஐடி. நாசா, சேலத்தில் இருந்து சென்னை வரையிலான 350 கிலோமீட்டர் பயணத்தை அடிப்படையாக கொண்டு சுமார் 20 புகைப்படங்களை சிபிசிஐடிக்கு கொடுத்துள்ளது நாசா ஆராய்ச்சி மையம்.

நாசாவின் உதவியைப் பெற்ற காவல்துறையினர், கொள்ளையர்களைப் பிடிப்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டனர். அந்த ஐந்தே முக்கால் கோடி பணத்தை கொள்ளையடித்தவர்களில் முக்கியமான கொள்ளையர்களான தினேஷ் மற்றும் ரோகன் பார்த்தி ஆகிய இருவரை சென்னை சிபிசிஐடி, மத்திய பிரதேசத்தில் கைது செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவத்தை வழிநடத்திய இந்த கும்பலில் தலைவன் மோகர் சிங், மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் சிறை ஒன்றில் இருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த கைதியை விரைவில் தமிழகம் கொண்டு வர காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Cbcid finds the 15 criminals who involved in salem train robbery case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X