Advertisment

வெளிநாட்டு நிதியில் கோடிக்கணக்கில் முறைகேடு...மதுரை தொண்டு நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு

CPSC அறக்கட்டளை மற்றும் 'People's Watch' தொண்டு நிறுவனம் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளிலும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளிலும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது

author-image
WebDesk
New Update
வெளிநாட்டு நிதியில் கோடிக்கணக்கில் முறைகேடு...மதுரை தொண்டு நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையில் உள்ள தனியார் அறக்கட்டளை மற்றும் 'People's Watch' தொண்டு நிறுவனம் மீது எட்டு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisment

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் அதற்கான ஆவணங்களைக் காட்டி முறையாக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் CPSC அறக்கட்டளையின் கீழ் 'People's Watch' என்ற தொண்டு நிறுவனம் 1985 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நன்கொடைகளைக் கொண்டு குழந்தைகள், முதியவர்கள், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு உதவிகளைச் செய்வதுடன், பல காப்பங்களை நடத்தி வருகிறது.

இருப்பினும், வெளிநாட்டு நிதிகளைப் பெறுவதற்கான விதிமுறைகளை CPSC அறக்கட்டளை பெறவில்லை என்றும், கோடிக்கணக்கான நிதியில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஆய்வு செய்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் நன்கொடை பெற்றதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதையும், முறையான அனுமதி பெறாததையும் உறுதி செய்தது. இதையடுத்து, இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க பரிந்துரைத்தது.

அதன் அடிப்படையில் களத்திலிறங்கிய சிபிஐ, கடந்த 2005-2006, 2010-2011 மற்றும் 2012-2013 காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து பலமுறை உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் கோடிக் கணக்கில் பணம் நன்கொடை பெற்றதை உறுதிசெய்தது.

எஃப்ஐஆரின்படி, CPSC அதன் FCRA பதிவு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு 2012 இல் ரூ. 28 லட்சமும், 2011 மற்றும் 2013 க்கு இடையில் ரூ. 44.50 லட்சமும் திரும்பப் பெற்றதாக கூறுகிறது. அதேபோல், 2008 முதல் 2012 வரை அது திரும்பப் பெற்ற ரூ. 1.70 கோடி, கிடைக்கப்பெற்ற வவுச்சர்களுடன் ஒத்துப் போகவில்லை என்றும் குறிப்பிடுகிறது.

publive-image

இதையடுத்து, CPSC அறக்கட்டளை மற்றும் 'People's Watch' தொண்டு நிறுவனம் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளிலும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளிலும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக People's Watch நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிஃபக்னேவை கூறியதாவது, " இந்த விவகாரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2014 முதல் 2016 வரை நிலுவையில் இருந்தது. பின்னர், மீண்டும் 2016 முதல் தற்போது வரை விசாரணை வட்டத்தில் உள்ளது. எங்கள் வங்கி கணக்குகள் சுமார் 2600 நாள்களாக மூடப்பட்டு இருக்கிறது.

2008-2014 தொடர்பான நிதி ஆவணங்களை முறையாகத் தேடி வரும் சிபிஐ அதிகாரிகளுக்கு நாங்கள் ஒத்துழைக்கிறோம். எஃப்சிஆர்ஏ, 2010ன் படி இந்த காலகட்டத்தில் செய்யப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்பட்டன. ஆனால் நாங்கள் ஏதோ சதித்திட்டத்தில் ஈடுபட்டது போல் சிபிஐ அதைகுற்றமாக காட்ட முயற்சிக்கிறது" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment