Advertisment

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு... சுங்கத்துறை முன்னாள் அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வு பெற்ற சுங்கம் மற்றும் சேவை வரி கூடுதல் ஆணையர் ஆறுமுகத்திற்கு 2 ஆண்டு சிறை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Whatsapp Admin, Whatsapp Admin Arrested

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வு பெற்ற சுங்கம் மற்றும் சேவை வரி கூடுதல் ஆணையர் ஆறுமுகத்திற்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு.

சென்னை சுங்கம் மற்றும் சேவை வரி துறையின் முன்னாள் ஆணையர் எஸ். ஆறுமுகம் பணியில் இருந்த 1998 ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 1கோடியே 39 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ  கடந்த 2011 ஆம் ஆண்டு  வழக்கு பதிவு  செய்தது. இதில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் மீது உற்பட 5 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யபட்டது. இந்த வழக்கு சென்னை 14 ஆவது சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதி நடராஜன் இன்று(10.11.17) தீர்ப்பு வழங்கினர். அதில் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறுமுகத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபடவில்லை எனவே அவர்களை விடுதலை செய்வதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆறுமுகத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் சிபிஐ தரப்பில் நிரூபிக்கபட்டுள்ளது. எனவே அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது உத்தரவிட்டார்.

Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment