Advertisment

வஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை : அன்வர்ராஜா எம்.பியிடம் தொடர்கிறது விசாரணை!

அதிமுக- வில் இருக்கும் முக்கிய புள்ளியான அன்வர்ராஜா சிபிஐ அதிகாரிகளிடம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எம்.பி அன்வர்ராஜா

எம்.பி அன்வர்ராஜா

எம்.பி அன்வர்ராஜா : சென்னை மண்ணடியில் உள்ள வஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். வஃபு வாரிய தலைவராக இருக்கும் அ.தி.மு.க. எம்.பி அன்வர்ராஜாவிடம் தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

Advertisment

மதுரையில் இருக்கும் வஃபு வாரிய கல்லூரியில் பணியாளர்கள் நியமிப்பத்தில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சைகள் வெடித்தன. இதுத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நிதீபதிகள் இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து நேற்றைய தினம், மதுரை சிபிஐ அதிகாரி கார்த்திகைசாமி, ஆய்வாளர் வேலாயுதம், மதுசூதனன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் உள்ள அன்வர்ராஜா வீட்டிற்கு சென்றனர். அதிமுக எம்பியான இவர், தற்போது வஃபு வாரிய தலைவர் பொறுப்பில் வகிக்கிறார்.

அன்வர்ராஜாவிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் வழக்கு தொடர்பாக சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால் அறிக்கை தாக்கல் செய்வது கட்டாயம் ஆகும். எனவே, சிபிஐ அதிகாரிகள் இதுக் குறித்த தகவலை வெளியில் கூற மறுத்தனர். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக சென்னை மண்ணடியில் உள்ள வஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று (22.3.19) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் எம்.பி அன்வர்ராஜாவும் உடன் இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கிவிட்ட சமயத்தில் அதிமுக- வில் இருக்கும் முக்கிய புள்ளியான அன்வர்ராஜா சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கி இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment