Advertisment

பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு: கிஷோர் கே.சுவாமி மீது வழக்குப்பதிவு

அவர் பதிவிட்ட தவறான ட்வீட்களையும் அந்த பெண் பத்திரிக்கையாளர் போலீசில் சமர்ப்பித்தார்.

author-image
WebDesk
New Update
Kishore K Swamy arrested for abusive tweets

கிஷோர் கே சுவாமி

பெண் பத்திரிகையாளர் மீது தவறான கருத்துக்களை வெளியிட்ட கிஷோர் கே. சுவாமி மீது, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் செல் (சிசிபி) போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisment

பெட்டிக் கடை ஓனர் டூ எம்.எல்.ஏ.: செக்ஸ் புகாரில் சரிந்த நாஞ்சில் முருகேசன் பின்னணி

சில ஆண்டுகளாக பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக அமைப்புகள் குறித்து தவறான கருத்துக்களை கிஷோர் வெளியிட்டு வருவதாக காவல்துறை தெரிவித்தது. தமிழ்நாடு மகளிர் பத்திரிகையாளர்கள் மன்றத்தின் புகாரைத் தொடர்ந்து அவர், கடந்த அக்டோபரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அதே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

தற்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கிஷோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பதிவிட்ட தவறான ட்வீட்களையும் அந்த பெண் பத்திரிக்கையாளர் போலீசில் சமர்ப்பித்தார். "எல்லா கருத்துக்களும் தவறானவை. இது எனக்கு மன வேதனையைத் தந்தன, அதோடு எனது அன்றாட நடவடிக்கைகளை முடக்கியது, என்னால் எனது வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை." எனவும் அந்த பெண் பத்திரிக்கையாளர் தெரிவித்தார்.

7 பேர் விடுதலையில் ஆளுனர் முடிவெடுக்க தாமதம் ஏன்? ஐகோர்ட்டில் விளக்கம்

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி கிஷோர் கே.சுவாமி மீது ஐபிசி 354(டி) (சமூக வலைதளங்கள் மூலம் பெண்ணை பின் தொடர்ந்து தொந்தரவு செய்வது) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். எனினும் சில மணி நேரங்களில் கிஷோர் சொந்த ஜாமினில் வெளிவந்தார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வலியுறுத்தல்

”அவதூறு பரப்புபவர்களை வேடிக்கைப் பார்க்காமல் சட்டப்படி கைது செய்ய காவல்துறைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்.

சமீபகாலமாக சமுகவலைதளங்களில் பத்திரிகையாளர்கள் , ஊடகங்கள் மீது அப்பட்டமான அறுவெறுக்கத்தக்க வகையில் அவதூறு பரப்பும் செயல்கள் அதிகரித்துள்ளது.

குறிப்பாக தனிமனித தாக்குதல்கள் மூலம் பத்திரிகையாளர்களை மிரட்டுவது தரக்குறைவாக எழுதுவது -பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் குடும்பத்தினர் படங்களை வெளியிட்டு மன உளைச்சல் தரும் அருவருப்பான வேலைகள் அதிகரித்து வருகின்றது.பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகளை பரப்பி மிரட்டுவது ஆகிய மிக மோசமான செயல்கள் தொடர்கிறது .

இது போன்ற மிகத்தரக்குறைவான கீழ்த்தரமான அவதூறு பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருபவர் கிஷோர் கே சுவாமி என்கிற ஒரு நபர்.இந்த நபர் மீது சென்னை பெருநகர காவல்துறையினரிடம் பல பத்திரிகையாளர்கள் - பத்திரிகையாளர் அமைப்புகள் புகாரளித்தும் இதுவரை சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மிகுந்த போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யும்போது ஒரு சில அரசியல்வாதிகள் உதவியுடன் தப்பித்து வந்தார். இன்றைய தினம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அறிகிறோம். இந்த நபர் மீது இதுவரை பத்திரிகையாளர்கள் கொடுத்த அத்தனை புகார்களின் மீதும் வழக்குகள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு அருவருப்பான அவதூறு பேர்வழி கைது செய்யப்பட வேண்டும். சட்டப்படி உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் இது போன்ற அவதூறு பேர்வழிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

பல வருடங்களாக இதைப்போன்ற அவதூறு பரப்பும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவே இன்றைய மோசமான நிலைக்கு காரணம் என கருதுகிறோம். இனியும் இது போன்ற சமுக விரோத அவதூறு நபர்களின் அவதூறு செயல்களை வேடிக்கைப் பார்க்காமல் உடனே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.அப்படிப்பட்ட நடவடிக்கைகளே ஊடகத்துறையினருக்கு அரசின் மீது காவல்துறையின் மீது நம்பிக்கையை உருவாக்கும்.

தமிழகத்தில் ஊடகத்துறையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இணையவழி அவதூறு தாக்குதல்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள் விடுக்கிறது. தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுப்பார் என்றும் நம்புகிறோம்.

அவதூறு பேர்வழிகளுக்கு பரிந்துரை செய்து தங்களது பெயரை எவரும் வீணாக்கிக் கொள்ளவேண்டாம் என்றும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆரோக்கியமான விமர்சனங்களை வரவேற்போம். பத்திரிகையாளர்கள் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்கள் தான். ஆனால் அறுவெறுக்கத்த தனி மனித தாக்குதல்களை -அவதூறுகளை வேரறுப்போம்.” என சென்னை பத்திரிக்கையாளர் மன்ற இணைச் செயலாலர் பாரதி தமிழன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment