Advertisment

ரூ82 கோடி செலுத்த ஓபிஎஸ்-க்கு ஐ.டி நோட்டீஸ்: தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 82.32 கோடி ரூபாய் வரி செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Cennai high court refused, madras hc order, hc refuse to stay income tax notice to OPS to pay rs 82 crore, ops, ரூ82 கோடி செலுத்த ஓபிஎஸ்-க்கு ஐ.டி நோட்டீஸ், வருமான வரித்துறை நோட்டீஸுக்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு, சென்னை உயர் நிதிமன்றம், o panneer selvam, tamilnadu, aiadmk

முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், 82.32 கோடி ரூபாய் வரி செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

Advertisment

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் 2016-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினர் இந்தச் சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமனா ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அந்த நோட்டீஸில் 2015 - 16 ம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 - 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82.12 கோடி ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வருமான வரித்துறை அனுப்பிய இந்த நோட்டீசின் பேரில் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று (நவம்பர் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்தததோடு, வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கில் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 82.32 கோடி ரூபாய் வரி செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

Chennai High Court Tamilnadu Ops Income Tax Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment