Advertisment

பேரறிவாளனின் கருணை மனு எங்கள் பார்வைக்கு அனுப்பப்படவில்லை - குடியரசுத் தலைவர் அலுவலகம்

குடியரசுத் தலைவருக்கும் சேர்த்து செயல்படும் உள்துறை அமைச்சகம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Athi Varathar, அத்தி வரதர் கோயில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

பேரறிவாளன் கருணை மனு : ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு 27 வருடங்கள் சிறையில் இருக்கிறார்கள் நளினி உட்பட ஏழு பேர்.

Advertisment

அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014ம் ஆண்டு தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றினார். ஆனால் இந்த தீர்மானத்தை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது மத்திய அரசு.

உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் அனுமதி பெற்றுக் கொண்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அப்போதைய தலைமைச் செயலாளார் ஞான தேசிகன் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து தகவல் ஏதும் வராததைத் தொடர்ந்து 3 மாதங்களுக்குள் பதிலளிக்க ஜனவரி மாதம் 2018ம் ஆண்டு உத்தரவிட்டது நீதிமன்றம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்தவர்களை விடுதலை செய்ய இயலாது என்று உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பதில் வந்தது. அதில் குடியரசுத் தலைவரின் பெயரில் அனுப்பபட்ட கடிதம் எனக் கூறப்பட்டது.

சிக்கலுக்கு உள்ளாகும் ஏழு பேரின் விடுதலை 

பேரறிவாளன் கருணை மனு

எதனை அடிப்படையாக கொண்டு குடியரசுத் தலைவர் இம்முடிவினை எடுத்தார் என்பதை அறிய பேரறிவாளன் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதற்கு பதில் கூறிய குடியரசுத் தலைவர் அலுவலகம் “ தமிழக அரசு 7 பேரின் விடுதலைக் குறித்து அனுப்பிய கடிதம் குடியரசுத் தலைவரின் பார்வைக்கு கொண்டு வரப்படவே இல்லை” என்ற அதிர்ச்சியூட்டும் கடிதத்தை பேரறிவாளனுக்கு அனுப்பியிருக்கிறது.

உள்துறை அமைச்சகத்தின் மறுப்பினை இவ்வழக்கில் ஏற்றுக் கொள்ள இயலாது என்றும் அவர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட கடிதம் குடியரசுத் தலைவரின் கடிதமாக கருத்தில் கொள்ளப்படாது என்றும் கடந்த 6ம் தேதி 7 பேரின் விடுதலை குறித்து வழக்கை விசாரித்து,  ரஞ்சன் கொகாய் தலைமையிலான மூவர் அமர்வு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Rajiv Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment