Advertisment

அகில இந்திய ஒதுக்கீட்டில் 27% இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சலுகை ஏற்க முடியாது - ஐகோர்ட்டில் திமுக தகவல்

மாநிலத்தில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கு எதிராக மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அளிக்கும் 27% இட ஒதுக்கீடு ஏற்கமுடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
அகில இந்திய ஒதுக்கீட்டில் 27% இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சலுகை ஏற்க முடியாது - ஐகோர்ட்டில் திமுக தகவல்

இந்த கல்வியாண்டு முதல் மாநிலத்தில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கு எதிராக மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அளிக்கும் 27% இட ஒதுக்கீடு ஏற்கத்தக்கது அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனு மீதான விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசாவலு முன் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது, ​​முதன்மை அமர்வு பரிந்துரைத்தபடி 69 சதவிகிதம் இடஒதுகீடு இல்லையென்றால் 50 சதவிகிதத்துக்கு குறைவாக எதையும் மாநில அரசு ஏற்காது என்று வில்சன் கூறினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு பரிந்துரைப்படி இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது.

முதலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தாக்கல் செய்த பொதுநல மனுக்கள் மீது உத்தரவு பிறப்பித்த அப்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு, மற்ற விஷயங்களுடன் மனுதாரர்களால் கூறப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை வழங்குவதற்காக ஒரு குழு அமைக்க பரிந்துரைக்கப்படும் என்று கூறியது. மேலும் அந்த குழு, இடஒதுக்கீட்டின் சதவீதத்தையும் சரிசெய்ய முடியும் என்று உயர் நீதிமன்றம் கூறியது.

இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி, திமுக தற்போது நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு ஜூலை 19ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ​​தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான தற்போதைய அமர்வு, 1993 மாநில சட்டத்தின் அடிப்படையில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் முறை குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவிக்க ஒரு வார கால அவகாசத்தை மத்திய அரசுக்கு வழங்கியது. மாநிலத்தில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 2021-22 வரை மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்கை நடத்த வேண்டும்.

1993 மாநில சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு 69 சதவீதமாக இருக்கிறது. இது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. (கல்வி நிறுவனங்களில் இடங்கள் மற்றும் நியமனங்களில் அல்லது பணிகளில் இடஒதுகீடு)

மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க மேலும் ஒரு வார கால அவகாசத்தை கடந்த வாரம் உயர் நிதிமன்றம் வழங்கியது. பின்னர் மத்திய அரசு 27 சதவீதம் வழங்குவதாக அறிவித்தது.

“27 சதவிகிதம் வழங்குவது என்பது உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் ஜூலை 2020 பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக செயல்படுகிறது. அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அதே ஆண்டு அக்டோபரில் உறுதி செய்தது. இந்த உத்தரவில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் ஓபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்றும் இது ஓபிசிக்கு மட்டும் 50 சதவிகிதம் வழங்குவது மராட்டிய வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக செல்லும் என்றும் நீதிபதிகளிடம் கூறினார்.

மத்திய அரசின் ஜூலை 29, 2021 உத்தரவின்படி, ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகிதமும், எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும், எஸ்டி பிரிவினருக்கு 7.5 sஅதவீதமும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு (EWS) மொத்தம் 59.5 சதவீதம் ஆகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“இந்த 50 சதவிகிதம் EWSக்கு ஒதுக்கப்பட்டதை உள்ளடக்கியதா?” உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

EWSக்கான 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வகுப்புவாத இடஒதுக்கீடா இல்லையா என்பதற்கான வழிமுறைகளைப் பெற்று கூறுகிறேன் என்று உதவி சொலிசிட்டர் ஜெனரல் பதிலளித்தார்.

இந்த அமர்வு, ஜூலை 20ம் தேதி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளையும், அக்டோபர் 2020இல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. அதுவரை நீட் தேர்வு நடத்தக் கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை அகஸ்ட் 9ம் தேதி வரை தள்ளி வைத்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Chennai High Court Dmk Reservation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment