சந்திரசேகர் ராவ்-மு.க.ஸ்டாலின் 2 1/2 மணி நேரம் ஆலோசனை : ‘3-வது அணி பற்றி பேசவில்லை’ என கூட்டாக பேட்டி

சந்திரசேகர ராவின் அபூர்வமான இந்த அரசியல் பயணம், தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்றும் (ஏப்ரல் 29), நாளையும் (ஏப்ரல் 30) இரு நாட்கள் சென்னையில் பயணத் திட்டம் வைத்திருக்கிறார். தேசிய அளவில் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒருய் மாற்று அணிக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. அது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதே சந்திரசேகர ராவின் நோக்கம்!

சந்திரசேகர் ராவ் நிகழ்ச்சிகள் LIVE UPDATES

மாலை 5.00 : சென்னையில் தங்கிய சந்திரசேகர் ராவ், நாளை தெலங்கானா கிளம்புகிறார்.

மாலை 4.45 : தொடர்ந்து சந்திரசேகர் ராவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘3-வது அணி குறித்து நாங்கள் பேசவில்லை. நாட்டின் வளர்ச்சி குறித்து பேசினோம். இதை அரசியல் ஆக்கவேண்டாம். இது தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. தொடர்ந்து விவாதிப்போம்’ என கூறினார்.

மாலை 4.40 : ‘கூட்டணி குறித்து பேசவில்லை. அதற்கு அவகாசம் இருக்கிறது’ என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மாலை 4.30 : சந்திரசேகர் ராவும், ஸ்டாலினும் சுமார் இரண்டரை மணி நேரம் ஆலோசித்தனர். மாநிலக் கட்சிகள் டெல்லியில் அதிகாரத்திற்கு வருவது குறித்த அம்சங்கள் அவர்களின் பேச்சில் இடம் பெற்றதாக திமுக வட்டாரத்தில் குறிப்பிட்டனர்.

மாலை 4.25 : சந்திரசேகர் ராவும், மு.க.ஸ்டாலினும் சந்திப்பை முடித்துக்கொண்டு ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஸ்டாலின் கூறுகையில், ‘மதச்சார்பின்மையை பாதுகாப்பது, மாநில சுயாட்சியை பாதுகாப்பது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது உள்ளிட்ட அம்சங்களை பேசினோம். தொடர்ந்து இது குறித்து அவ்வப்போது பேசுவோம். தமிழகத்தில் எங்களுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இது குறித்து விவாதிக்க இருக்கிறேன்.

திமுக.வின் செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்ட குழுக்களுடன் இது குறித்து பேசுவேன். ஒரு நல்ல ஆரோக்கியமான பேச்சுவார்த்தையாக அமைந்தது. திமுக சார்பில் மாநில சுயாட்சி மாநாடு குறித்து மாநாடு நடத்துவது குறித்து குறிப்பிட்டேன். அது குறித்து யோசிப்போம் என தெலங்கானா முதல்வர் குறிப்பிட்டார்’ என ஸ்டாலின் கூறினார்.

பிற்பகல் 2.20 : மு.க.ஸ்டாலின் இல்லத்தினுள் சந்திரசேகர் ராவ் நுழைந்தபோது துர்கா ஸ்டாலின் கைகூப்பி வரவேற்றார்.

chandrashekhar-rao-mk-stalin-karunanidhi-meeting

துர்கா ஸ்டாலின் கைகூப்பி வரவேற்றார்.

பிற்பகல் 2.15 : மு.க.ஸ்டாலின் இல்லத்திலும் சந்திரசேகர் ராவுக்கு பூங்கொத்து கொடுத்து ஸ்டாலின் வரவேற்றார். வீட்டு முன்பு கார் நிறுத்துமிடம் அருகே வந்து அவரை ஸ்டாலின் வரவேற்றார். அப்போது சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் அருகில் நின்றனர்.

பிற்பகல் 2.10 : மாநிலக் கட்சிகள் இணைந்து, ‘ஃபெடரல் ஃப்ரண்ட்’ (கூட்டாட்சி முன்னணி) என்ற பெயரில் புதிய அணி அமைப்பது குறித்து ஸ்டாலின் இல்லத்தில் அவருடன் சந்திரசேகர் ராவ் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற்பகல் 2.05 : கருணாநிதியிடம் நலம் விசாரிப்பை முடித்துக்கொண்டு சந்திரசேகர் ராவும், மு.க.ஸ்டாலினும் ஒரே காரில் ஆழ்வார்பேட்டையில் ஸ்டாலின் இல்லத்திற்கு செல்கிறார்கள். அங்கு சந்திரசேகர் ராவுக்கு மதிய உணவு அளித்து உபசரிக்கிறார் ஸ்டாலின்.

chandrashekhar-rao-mk-stalin-karunanidhi-meeting

சந்திரசேகர் ராவுக்கு மதிய உணவு அளித்து உபசரிக்கிறார் ஸ்டாலின்.

பிற்பகல் 1.50 : கோபாலபுரம் வந்தார் சந்திரசேகர் ராவ். அவரை ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வரவேற்றார். அவரைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் கைகுலுக்கி வரவேற்றனர். சந்திரசேகர் ராவை கருணாநிதியின் அறைக்கு ஸ்டாலின் அழைத்துச் சென்றார். அங்கு கருணாநிதியை நலம் விசாரித்தார் சந்திரசேகர் ராவ்.

chandrashekhar-rao-mk-stalin-karunanidhi-meeting

கருணாநிதியை நலம் விசாரித்தார் சந்திரசேகர் ராவ்.

பகல் 1.00 : சந்திரசேகர் ராவ், சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்திக்க இருக்கிறார்.

சென்னையில் சந்திரசேகர ராவ் பயணத் திட்டத்தை தெலங்கானா முதல்வர் அலுவலக அதிகாரிகள் வெளியிட்டனர். முழு நிகழ்ச்சிகள் இங்கே!

சந்திரசேகர ராவின் பயணத் திட்டம் வருமாறு :

Chandrashekhar Rao-MK Stalin Meeting

சந்திரசேகர் ராவ் சென்னை விசிட்

பகல் 11.15 மணி : ஹைதராபாத்தில், பெகும்பேட் பகுதியில் உள்ள தனது அலுவல்பூர்வ இல்லமான பிரகதி பவனில் இருந்து காரில் புறப்படுதல்.

பகல் 11.20 : பெகும்பேட் விமான நிலையத்தை அடைதல்.

பகல் 11.30 : பெகும்பேட் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் (எண் VT-IBP) சென்னைக்கு புறப்படுதல்.

பகல் 12.30 : சென்னை விமான நிலையத்தை வந்து சேருதல்.

பகல் 12.35 : சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படுதல்.

பகல் 12.45 : சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலை சென்று அடைதல்.

பகல் 1.00 : ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இருந்து காரில் புறப்படுதல்.

பகல் 1.30 : சென்னை, கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தை சென்று அடைதல், அங்கு கருணாநிதியை நலம் விசாரித்தல்.

பகல் 1.50 : கருணாநிதி இல்லத்தில் இருந்து காரில் புறப்படுதல்.

பிற்பகல் 2.00 : சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு வந்து சேருதல். ஸ்டாலினுடன் சந்திப்பு.

மாலை 3.00 : மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இருந்து காரில் புறப்படுதல்.

மாலை 3.30 : ஹோட்டல் ஐடிசி கிராண்ட் சோழா, வந்து சேருதல். அங்கு அனுமதி பெற்ற பார்வையாளர்களுடன் சந்திப்பு. இரவில் சென்னையில் தங்குகிறார்.

Chandrashekhar Rao-MK Stalin Meeting

சந்திரசேகர் ராவ் சென்னை விசிட்

நாளை (ஏப்ரல் 30) காலையில் அனுமதி பெற்ற பார்வையாளர்களை சந்திக்கிறார்.

நாளை பகல் 12.00 : ஐடிசி கிராண்ட் சோழாவில் இருந்து புறப்படுதல்.

நாளை பகல் 12.10 : சென்னை விமான நிலையம் வருதல்.

நாளை பகல் 12.20 : சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்படுதல்.

நாளை பிற்பகல் 1.30 : நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தனது இல்லத்தை அடைதல்.

சந்திரசேகர ராவின் அபூர்வமான இந்த அரசியல் பயணம், தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.

 

 

 

×Close
×Close