சந்திரயான் 3 தயாரிப்பு பணியில் இருந்த தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல் தந்தையை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் நேரில் அழைத்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்த சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய வீர முத்துவேல் தந்தை கூறுகையில்,
இன்றைய நாள் இந்தியா மட்டுமின்றி தமிழக மக்களும் மறக்க முடியாத நன்னாள். எனது மகன் வீர முத்துவேல் இந்த திட்டத்தை ஏற்றது முதல் பல மாதங்களாக விடாமுயற்சியாக குழுவாக செயல்பட்டு திட்டத்தில் வெற்றியும் கண்டுள்ளார். இந்தியா எப்போது வீரமான வெற்றி பெறும் நாடு என்பதை ஒவ்வொரு துறையிலும் நிரூபித்து வருவது வருகிறது. இதற்கு நாங்கள் சந்தோஷம் அடைவதை விட நமது நாட்டு மக்கள் அனைவரும் அதிக அளவில் சந்தோஷமாக இருக்கின்றனர் அதுவே பெரும் மகிழ்ச்சி.
சந்திராயன் திட்டத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னிலை வகித்துள்ளது நமக்கு பெருமை தருகிறது. ஓட்டுக்காக ரஷ்யாவும் மேற்கொண்ட ஆய்வு தோல்வியடைந்த நிலையில் நாம் சந்திராயன் திட்டத்தில் வெற்றி கண்டு இந்தியா ஒரு வல்லரசு நாடு என்ற பெருமையை எட்டி உள்ளோம். பிரதமர் மோடியும் பெருமையுடன் சந்தோஷப்பட்டதை பார்க்கிறோம். சந்திராயன் கடந்த முறை ஏற்பட்ட தோல்வியால் அவர் வருத்தம் அடைந்திருந்த நிலையில் தற்போது பெற்றுள்ள வெற்றி அவர் மட்டும் இன்றி நாட்டு மக்கள் அனைவரையும் சந்தோஷம் கொடுத்துள்ளது.
இஸ்ரோவின் பணியில் இந்தத் திட்டத்தால் எனது மகன் வீர முத்துவேல் வீட்டிற்கும் வர முடியவில்லை. எங்களிடம் அவர் அதிகம் பேச முடியவில்லை. நாங்கள் எப்போதும் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் விழுப்புரத்தில் எனது மகள் திருமணம் 23ஆம் தேதி நடந்தது. அதற்கு அழைப்பு வைப்பதற்காக நான் சென்றேன் இத்திட்டப் பணியில் தீவிரமாக இருந்ததால் அவரால் அந்த திருமணத்துக்கும் வர முடியவில்லை திருமணத்துக்கு அவர் வராத நிலையிலும் அவர் சாதித்தது தான் எங்களுக்கு சந்தோஷம்.
இதற்கெல்லாம் காரணம் இறைவன் தான் நானும் அவரும் மிகுந்த இறை நம்பிக்கை உடையவர்கள். இந்தத் திட்டத்துக்காக திருப்பதி உள்ளிட்ட பல கோயில்களுக்கும் அவர் சென்று வழிபட்டுள்ளார். இறைவன் அருளால் இது சாத்தியமாகி உள்ளது. ஆயிரக்கணக்கான நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்து வருவதும் மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. நமது நாடு பல சாதனைகளை கடந்த அடுத்தடுத்த முன்னேற்றத்திற்கு செல்கிறது திட்டம் வெற்றி பெறுவதற்கு விழுப்புரத்தில் உள்ள விநாயகர் கோவில் தொடர்ந்து இன்று வழிபாடு நடத்தினோம்.
இதேபோல் நாடு முழுவதும் பல இடங்களில் வழிபட்டது இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது குடும்பத்தை விட அவருக்கு தனது பணியும் அந்த திட்டத்தின் செயலும் தான் முக்கியமாக கொண்டு பணியாற்றி வருகிறார். இந்த வெற்றியை கண்டதும் எனக்கு ஆனந்த கண்ணீர் தான் வந்தது என்றார் பல்வேறு அரசியல் கட்சியினர் முக்கிய நபர்கள் ரயில்வே ஊழியர்கள் ரயில்வே அலுவலர்கள் பலர் அவருக்கு இனிப்பு வழக்கு வாழ்த்து தெரிவித்தனர் என வீர முத்துவேல் தந்தை கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.