Advertisment

திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

நிவர் புயலின் போது நீர் வரத்து அதிகரிப்பால் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Chembarambakkam reservoir will be opened at 12 noon today to release 1000 cusecs of water : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே நிவர் புயலின் தாக்கத்தாலும் தொடர் மழையாலும் செம்பரம்பாக்கம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. தொடர் நீர் வரத்து காரணமாக நிவர் புயலின் போது ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டது. மேலும் அடையாறு ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இன்று பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் அணை திறக்கப்பட உள்ளது.

Advertisment

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

நீர்வரத்தைப் பொறுத்து மேலும் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குன்றத்தூர், காவலூர், நத்தம், திருமுடிவாக்கம், திருநீர்மலை, வழிநிலைமேடு பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியில் 22.15 அடிக்கு நீர் இருந்தது. அதன் கொள்ளளவு 3158 கன அடியாக இருந்தது.

பாம்பன் - குமரி அருகே கரையை கடக்கும் புரெவி புயல் குறித்த அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

 

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment