Advertisment

செம்பரம்பாக்கம் தண்ணீர் திறப்பு 7000 அடியாக அதிகரிப்பு; வெள்ள அபாயம் தடுக்க அதிகாரிகள் தீவிரம்

2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chembarambakkam tamil news nivar cyclone

chembarambakkam tamil news nivar cyclone

chembarambakkam tamil news nivar cyclone : சென்னைக்கு குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று 7000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. ஏரி முழு கொள்ளவை எட்டியதால், தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisment

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகரில் பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியது. நீர்மட்டம் 22 அடியை எட்டுவதால் முன்னெச்சரிக்கையாக தண்ணீர் திறக்கப்பட்டது.

மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதோடு செம்பரம்பாக்கம் பகுதியில் நாளை காலை ஆறு மணிக்குள் 15 முதல் 20 செ.மீ வரை கனமழை பெய்யும். இதனால் ஏரிக்கு 7000 கனஅடி நீர் வரத்து இருக்கும் என்பதால் எச்சரிக்கை தேவை என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஏரி கொள்ளளவை எட்டியதன் காரணமாக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்டார்.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் படிப்படியாக வெளியேற்றப்படுவதால், தாழ்வானப் பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் ஏரியிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் இன்று திறக்கப்பட்டது. இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

வழுதியம்பேடு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆற்றில் நீர் வரும். அப்படியே அது கடலில் கலக்கும். இந்த ஏரியில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேறியதால் கடந்த 2015ல் வெள்ளம் ஏற்பட்டதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

மாலை 6 மணி நிலவரம்: செம்பரம்பாக்கம் தண்ணீர் திறப்பு 5000 அடியாக அதிகரிப்பு; வெள்ள அபாயம் தடுக்க அதிகாரிகள் தீவிரம்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. 25-ம் தேதி (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பிறகு இந்த அளவு 1500 கன அடியாக உயர்த்தப்பட்டது.

மாலை நிலவரப்படி அணைக்கு 4000 கன அடி தண்ணீர் வந்தது. எனவே அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அளவு 5000 கன அடியாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து பலத்த மழை பெய்வதால், இரவில் இன்னும் தண்ணீர் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இரவு 9 மணி: இரவு 9 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 7000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment