Advertisment

சென்னையில் இருந்து பயணிக்க விமான கட்டணம் அதிரடி உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

Chennai Tamil News: சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் எதிர்பாராவிதத்தில் அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
சென்னையில் இருந்து பயணிக்க விமான கட்டணம் அதிரடி உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

Chennai Tamil News: வருகின்ற அக்டோபர் மாதம், பண்டிகைகள் மற்றும் அரசு விடுமுறைகள் அதிகமாக வரும் காரணத்தினால், வெளி ஊர்களுக்கு பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இதனால், சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் எதிர்பாராவிதத்தில் அதிகரித்துள்ளது.

publive-image

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 4,500 ரூபாய்க்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது, 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல, ஜெய்ப்பூருக்கு 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 24 ஆயிரம் ரூபாய் வரையிலும், கொல்கட்டாவிற்கு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 22 ஆயிரம் ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.

அகமதாபாத்திற்கு செல்லும் விமான கட்டணம்  9 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரம் ரூபாய் வரையிலும், புனேவிற்கு 9 ஆயிரம் ரூபாய் வரையிலும், மும்பைக்கு 16 ஆயிரம் ரூபாய் வரையிலும், மதுரைக்கு ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

மேலும், சென்னையிலிருந்து திருச்சி, கோயம்பத்தூர், திருவனந்தபுரம், பெங்களூரு உட்பட பல நகரங்களுக்கு செல்லும் பயணிகள் கட்டணமும் அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Chennai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment