Advertisment

இந்தியாவிலேயே முதல்முறையாக நம்ம சென்னை ஏர்போர்ட்ல தான் இந்த காபி பாக்ஸ்...

Chennai airport : முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை கொண்டு செயல்படும் காபி பாக்ஸ் திறக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Travel Food Services,Chennai International Airport,chennai airport

Travel Food Services,Chennai International Airport,chennai airport,Cafe run by speech impaired,Cafe run by SHI individuals,Cafe run by SHI,Cafe run by hearing impaired, சென்னை விமானநிலையம், காபி பாக்ஸ், மாற்றுத்திறனாளிகள்

நாட்டில் உள்ள விமானநிலையங்களில் முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை கொண்டு செயல்படும் காபி பாக்ஸ் திறக்கப்பட்டுள்ளது. டிராவல்ஸ் புட்ஸ் சர்வீசஸ் நிறுவனம் , ஏர்போர்ட் அத்தாரிட்டி உடன் இணைந்து இந்த காபி பாக்சை திறந்துள்ளது.

இதுதொடர்பாக, டிராவல்ஸ் புட்ஸ் சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்றவர்களை போல சமவேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் சென்னை விமானநிலையத்தில் முதல்முறையாக இந்த காபி பாக்ஸ் திறக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் துவங்கப்பட்டுள்ள இந்த அவுட்லெட்டை போல, நாட்டில் உள்ள மற்ற விமானநிலையங்களிலும் காபி பாக்ஸ் அவுட்லெட்கள் விரைவில் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராவல்ஸ் புட்ஸ் சர்வீசஸ் நிறுவனம்,டில்லி, மும்பை, கோவா, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 18 நகரங்களில் உள்ள விமானநிலையங்கள் மற்றும் ரயில்வே ஸ்டேசன்கள் 19 லாஞ்ச்களில் 300க்கும் மேற்பட்ட அவுட்லெட்களை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment