Advertisment

ஓலா டாக்ஸி மட்டும் எந்தவிதத்தில் ஒசத்தி - சென்னை ஏர்போர்ட்டில் குமுறும் பயணிகள்

Chennai airport : ஒரே ஒரு டாக்ஸி சேவைக்கு மட்டும் அனுமதியை அளித்துவிட்டு அந்த வசதியை மட்டும் பயன்படுத்தவேண்டும் என்று பயணிகள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai, chennai airport, arrival terminal, domestic, international terminal

chennai, chennai airport, arrival terminal, domestic, international terminal, Chennai news, Chennai latest news, Chennai news live, Chennai news today, Today news Chennai,Uber Cup,Rajiv Gandhi International airport,Ola cabs,Kempegowda International Airport,cab,airport, சென்னை விமானநிலையம், டெர்மினல், ஓலா டாக்ஸி

சென்னை விமானநிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் ஆட்களை ஏற்றிக்கொள்ள ஓலா டாக்ஸிகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. வேண்டிய பகுதிகளுக்கு செல்ல ஒரே ஒரு டாக்ஸி சேவையை மட்டும் நம்பியுள்ளதால், அதிக சிரமங்களுக்கு உள்ளாவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

சென்னை விமானநிலையத்தில் டொமஸ்டிக் மற்றும் இன்டர்நேசனல் பயணிகள் வருகை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிச்செல்ல ஓலா டாக்ஸி நிறுவனத்திற்கு மட்டும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அனுமதி வழங்கியுள்ளது. மற்ற டாக்ஸி சேவை நிறுவனங்கள், பார்க்கிங் பகுதியில் இருந்து மட்டுமே பயணிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும்.இன்டர்நேசனல் டெர்மினலுக்கு அருகிலேயே பார்க்கிங் பகுதி உள்ளதால், அவர்கள் ஓலா டாக்ஸி சேவை கிடைக்காதபோது, மற்ற டாக்ஸிகளின் சேவைகளை எளிதாக அவர்களால் பெறமுடிகிறது.

ஆனால், டொமஸ்டிக் டெர்மினலிருந்து வெளியே வரும் பயணிகளுக்கு போதாதகாலம். அவர்கள் ஓலா டாக்ஸியை தவிர்த்து, மற்ற டாக்ஸி சேவைகளை பெற விரும்பினால், டெர்மினலுக்கு எதிர்புறம் உள்ள சாலையை கடந்து தான் பார்க்கிங் பகுதிக்கு செல்ல முடியும். லக்கேஜ்களை தூக்கிக்கொண்டு செல்லவேண்டும் என்பதால், அவர்களின் நிலை அந்தோ பரிதாபம் தான்...

ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் மற்ற விமான நிலையங்களில் இதுபோல அல்லாமல், பல்வேறு டாக்ஸி சேவை நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் நிறுவனங்களை பயணிகள் தேர்ந்தெடுக்க முடிகிறது.

இதுகுறித்து பயணிகள் தெரிவித்துள்ளதாவது...

ஒரு டாக்ஸி நிறுவனத்திற்கு மட்டும் ஏன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை தன்னால் தற்போதுவரை புரிந்துகொள்ள இயலவில்லை. மற்ற டாக்ஸி சேவை நிறுவனங்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மற்ற டாக்ஸி நிறுவனங்களை விட, ஓலா மற்றும் உபர் டாக்ஸி கட்டணங்கள் குறைவு என்ற மாயபிம்பம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஒரே ஒரு டாக்ஸி சேவைக்கு மட்டும் அனுமதியை அளித்துவிட்டு அந்த வசதியை மட்டும் பயன்படுத்தவேண்டும் என்று பயணிகள் நிர்பந்திக்கப்படுவதாக மற்றொரு பயணி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் உயரதிகாரியை தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்ததாவது, ஓலா டாக்ஸி ஆபரேட்டர்களுக்கு மட்டுமே டெர்மினல் பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment