Advertisment

நம்புவீர்களா? சென்னை ஏர்போர்ட்டில் ஹெல்மெட் கட்டாயம்!

author-image
Janardhan koushik
புதுப்பிக்கப்பட்டது
New Update
நம்புவீர்களா? சென்னை ஏர்போர்ட்டில் ஹெல்மெட் கட்டாயம்!

Chennai Airport, Airport glass breaking, Chennai Airport Glass breaks, Fall ceiling, Airport glass panel disaster, Glass panel shutters - சென்னை, சென்னை விமான நிலையம், சென்னை விமான நிலையம் கண்ணாடி இடிந்தது, சென்னை விமானம், விமான கோளாறு, விமான நிலையம், கண்ணாடி மேற்குறை

Another glass break at Chennai Airport : சென்னை விமானநிலையத்தில் இன்று 86வது முறையாக கண்ணாடி இடிந்து விழுந்துள்ளது. விமானநிலையத்தில் உள்நாட்டு முனையத்தின் 4வது நுழைவு வாயிலில் மேற்கூரை பகுதியில் இருந்து கண்ணாடி இடிந்து விழுந்தது. இதை எப்படி சரிப்படுத்துவது என்று அதிகாரிகள் ஆலோசனை செய்வதாக தகவல் வந்தன.

Advertisment

ஒருவேளை அதிகாரிகள் ஆலோசனை இப்படி செய்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாக எழுதிய கட்டுரை இதோ!

செய்தி : சென்னை விமானநிலையத்தில் 86வது முறையாக கண்ணாடி இடிந்து விழுந்தது.

அதிகாரி சுமைதாங்கி : தொடர்ந்து நம்ம ஏர்போர்ட்ல கண்ணாடி விழுந்துனே இருக்கு, என்ன தான் பண்றது?

அதிகாரி இடிதாங்கி : நானும் அத பத்தி தான் யோசிச்சேன். ஒவ்வொரு முறையும் உள்ள வரும்போது செம பயமா தான் இருக்கு, என்ன பண்லாம்? ஆ! ஒரு யோசனை! பேசாம ஹெல்மெட் மாட்டிகிட்டு உள்ள வந்த எப்படி இருக்கும்?

அதிகாரி சுமைதாங்கி : செம யோசனை! அப்டியே இடிஞ்சு விழுந்தாலும் தலைக்கு வந்தது ஹெல்மெட் ஓட போகும்.

பிரேக்கிங் நியூஸ் : சென்னை விமான நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இனி நீங்கள் சென்னை ஏர்போர்ட்டிற்குள் செல்ல வேண்டும் என்றால் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

செய்தியாளர்கள் : எதற்காக எந்த திடீர் முடிவு?

அதிகாரி சுமைதாங்கி : இந்த முயற்சி ஏன் என்று நீங்கள் கேட்கலாம், ஒவ்வொரு முறையும் கண்ணாடி இடிந்து விழும்பொழுது எப்படி உங்களை நீங்கள் பாதுகாத்து கொள்வீர்கள்? அதற்காக தான் இந்த அறிய முடிவை சென்னை விமான நிலையம் எடுத்துள்ளது. எப்படி பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பிறகு தங்கள் சொந்த துணி பைகளை எடுத்து வர சொல்ல அரசாங்கமே அறிவிருத்தியதோ அது போல நீங்கள் உங்கள் சொந்த ஹெல்மெட்டை எடுத்து வரவேண்டும். எடுத்து வரும் ஹெல்மெட் கட்டாயம் தரமானதாக இருக்க வேண்டும், தரம் குறைந்த ஹெல்மெட்டை எடுத்து வந்து உங்கள் மண்டை உடைந்தால் நிர்வாங்கம் பொறுப்பல்ல!

நீங்கள் ஒரு வேளை ஹெல்மெட்டை மறந்து வீட்டில் வைத்து வந்தால், உங்களுக்கு இங்கயே ஒரு ஹெல்மெட் அளிக்கப்படும் அதை விமான நிலையத்தின் உள்ளே நுழையும்போது போட்டுகொண்டு பின்பு விமானம் ஏறுவதற்கு முன்பு கவுண்டரில் தந்து விட வேண்டும், இதற்கு முன்பணமாக 5 ருபாய் செலுத்தினால் போதும்.

இதுகுறித்து அதிகாரி சுமைதாங்கி கூறுகையில், " ஹெல்மெட் கட்டாயம் மக்கள் அணிந்து வர வேண்டும். அது ரோட்டிலும் சரி, விமான நிலையத்தின் உள்ளேயும் சரி, அது தான் அவர்களுக்கு பாதுகாப்பு."

செய்தியாளர்கள் :இந்த ஹெல்மெட் திட்டத்திற்கு பதிலாக தரமான கண்ணாடி கூரைகளை அமைத்தல் நன்றாக இருக்குமே

அதிகாரி சுமைதாங்கி : நாங்களும் அதே தான் முயற்சி செய்கிறோம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இந்த ஹெல்மெட். வரும் காலத்தில் உடல் முழுக்க

பாதுகாக்கக்கூடிய ஆடைகளை நாங்கள் கூடிய விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

***இந்த கட்டுரை முழுக்க முழுக்க கற்பனை நோக்கில் எழுத்தப்பட்டது, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment