Advertisment

சென்னை பேக்கரி உரிமையாளர் கைது: முஸ்லிம் பணியாளர் இல்லை என விளம்பரம் செய்தவர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai bakery owner arrested, bakery owner advertised no muslim staff islamophobic, முஸ்லிம் பணியாளர்கள் இல்லை என விளம்பரம், சென்னை பேக்கரி உரிமையாளர் கைது, no muslim staff islamophobic ad, chenani bakery owner arrested, chennai, tamil nadu, latest tamil news, latest tamil nadu news

chennai bakery owner arrested, bakery owner advertised no muslim staff islamophobic, முஸ்லிம் பணியாளர்கள் இல்லை என விளம்பரம், சென்னை பேக்கரி உரிமையாளர் கைது, no muslim staff islamophobic ad, chenani bakery owner arrested, chennai, tamil nadu, latest tamil news, latest tamil nadu news

சென்னையில் பேக்கரி ஒன்றில் பொருட்கள் ஜெயின் பணியாளர்களால் செய்யப்படுகிறது. இங்கே முஸ்லிம் பணியாளர்கள் இல்லை என்று விளம்பரம் செய்த பேக்கரியின் உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னையில் உள்ள ஒரு பேக்கரி, இங்கே ஆர்டரின் பேரில் ஜெயின்களால் செய்யப்படுகிறது. முஸ்லிம் பணியாளர்கள் இல்லை என்று விளம்பரம் செய்தது வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சையானது. இந்த விளம்பரம் இஸ்லாமிய வெறுப்பைக் கொண்டுள்ளதாக சிலர் சுட்டிக்காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விளம்பரம் சென்னை தி.நகரில் உள்ள ஜெயின் பேக்கரிஸ் அண்ட் கன்ஃபெக்‌ஷனரிஸ் என்ற பேக்கரி, ராஜஸ்தானி ஹோம்மேட் வீட்டுத் தயாரிப்பில் பேக்கரி பொருட்கள் செய்து தரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, மேல் பகுதியில் ஆர்டரின் பேரில் பொருட்கள் ஜெயின்களால் செய்யப்படுகிறது. முஸ்லிம் பணியாளர்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

8, 2020

மேலும், பெரிய ஆர்டர்கள் என்ற பெயரில் குறைந்தபட்ச ஆர்டர்களுக்காக இலவசமாக மாதிரியைக் கேட்டு அழைக்காதீர்கள் என்றும் நன்கொடைக்காக அழைக்காதீர்கள் என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம், சமூக ஊடகங்களில் பரவலானதைத் தொடர்ந்து, இது இஸ்லாமிய வெறுப்பைக் கொண்டிருப்பதாக புகார்கள் எழுந்தன.

இது குறித்து ஊடகங்கள் கேட்டபோது, அந்த பேக்கரியின் உரிமையாளர் கூறுகையில், பல வாடிக்கையாளர்கள் நீங்கள் முஸ்லிம் பணியாளர்களை வேலைக்கு வைத்திருக்கிறீர்களா இல்லையா என்று கேட்டு விசாரித்தனர். இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் இதுபோன்ற விளம்பரம் வாட்ஸ்அப்பில் செய்யப்பட்டது என்று விளக்கம் அளித்தனர்.

8, 2020

இருப்பினும், முஸ்லிம் பணியாளர்கள் இல்லை என்ற பேக்கரியின் சர்ச்சை விளம்பரம் இஸ்லாமிய வெறுப்பைக் கொண்டுள்ளது என்ற புகார் வலுத்ததைத் தொடர்ந்து, அந்த பேக்கரியின் உரிமையாளர் போலீசாரால் கைது செய்யபப்ட்டுள்ளனர். அவர் மீது, கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஆத்திரமூட்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment