Advertisment

நிர்வாண ஓவியங்கள் மிகப் பெரிய கலை, அதை பெருமையாக வரைகிறேன் - சென்னை ஓவியர் ரம்யா சதாசிவம்

ரம்யா சதாசிவம் : எல்ஜிபிடி மக்களின் உணர்ச்சிகளையும், உறவுகளில் உள்ள நெருக்கத்தையும்   ஒவியமாக்க விரும்புகிறேன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai-based-artist-ramya-sadasivam-excels-in-figurative-art-which-includes-nude-painting-next-fous-on-lgbt-community

chennai-based-artist-ramya-sadasivam-excels-in-figurative-art-which-includes-nude-painting-next-fous-on-lgbt-community

“கலை எப்போதும் நேரத்தால் கைப்பற்றமுடியாது,  இதை நாளை அவர்களும் புரிந்துகொள்வார்கள்,”என்று இந்தியாவின் பிக்காசோ எம்.எஃப். ஹுசைன் கூறினார். சென்னையைச் சேர்ந்த கலைஞர் ரம்யா சதாசிவமும் இந்த கோட்பாடை ஒப்புக்கொள்கிறார்.

Advertisment

33 வயதான இந்த கலைஞர் பல்வேறு வகையான ஓவியங்களில் திறமை பெற்றவர். உருவக கலை - குறிப்பாக நிர்வாண ஓவியங்களை சித்தரிப்பத்தில் கை தேர்ந்தவர். நிர்வாண ஓவியங்களால் தன்னை சிலர் தவறாக கருதுகின்றனர் என்று அவர் நினைத்தாலும், இந்த வகையான ஓவியங்கள் எதார்த்தை பிரதிபலிக்கிறது என்று பாராட்ட மக்கள் மெதுவாக கற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் நம்புகிறார்.

வாட்டர் கலரைப்  பயன்படுத்தி தனது தாயார்,  கிரீடத்துடன் இருக்கும் இளவரசியை வரைந்ததைப் பார்த்த போது தான், கலை வடிவத்திற்கான தனது தேடல் தொடங்கியது என்கிறார் சதாசிவம் .

மேலும், “நான் சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தேன். எனது 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை முடித்த பிறகு, எனது ஆர்வத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. எனது கலை தாகத்திற்கான தேடல்கள் கலைக் கல்லூரியின் மூலம் நிறைவேற்றப்படும்  என்பது கூட எனக்குத் தெரியாது. எனவே, ஒரு வழக்கமான கல்லூரியில் சேர்ந்தேன், உயிரி தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பை முடித்து,  எம்பிஏ வையும் முடித்தேன்,” என்று சதாசிவம் கூறுகிறார்.

 

publive-image

 

பொருளாதார மிகவும் மந்தநிலையாக  இருக்கும் காலத்தில் தான், எனது எம்பிஏ படிப்பு முடிவடைந்தது. பொருளாதார மந்த நிலையால் தகுந்த வேலை கிடைக்கவில்லை. அந்த நேரத்தை,  மனதின் ஓரத்தில் ஒளிந்திருக்கும் ஓவியக் கலையை திறம்பட கற்க பயன்படுத்தினேன். ஆரம்பத்தில், ஓவியத்தை எனது வாழ்க்கையாக்கப் போகிறேன் என்பதை எனது குடும்பமும் உணரவில்லை, நானும் அதை அவர்களிடம் கொண்டு செல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தான் எனது தந்தையிடம் இதை உணர்த்த ஆரம்பித்தேன். தொடக்கத்தில் எனது திறன்களையும், சொல்லத் துடிக்கும் வார்த்தைகளையும்  அவர் உறுதியாக நம்பவில்லை. இருந்தாலும், எனது சில ஓவியங்களைப் பார்த்தவுடன், அவரும்  என்னை ஊக்குவிக்கத் தொடங்கினார். மனிதர்களை உருவங்களையும், உணர்வுகளையும்  பற்றிய எனது ஆர்வத்தை இந்த  சமூகம் ஏற்றுக்கொள்ளாது, என்று எனது அம்மாவிற்கு ஆச்சமும், கவலையும் இருந்தது .இறுதியில் எனது கலை ஜெயித்தது.  தற்போது, எனது குடும்பத்தினர் எனது வேலையைப் புரிந்து கொண்டுள்ளனர் . இன்னும் சுருங்க சொன்னால், இப்போது எனது ஒவியங்களில் வரும் வரவு/செலவை எனது  தந்தை தான்  பார்த்துக் கொள்கிறார் ”என்று சதாசிவம் புன்னகையுடன் கூறுகிறார்.

publive-image

உங்களுடைய உத்வேகம் யார் என்று கேட்டபோது, ​சில பெயர் பட்டியலையும் நமக்கு  தருகிறார் ரம்யா சதாசிவம்.

நான் இணையத்தில் பல மணிநேரத்தை  செலவு செய்யும் போது, ஓவியத்தின் சாரத்தைப் பற்றி  புரிந்துகொண்டேன். ஓவியங்களை பேசும் சில நபர்களையும் பின்பற்ற முடிவு செய்தேன். உலர் தூரிகை நுட்பத்தை நான் கற்றுக் கொண்டிருந்தபோது, ​​இகோர் கசரின் (ரஷ்ய உருவப்பட ஓவியர்) படைப்புகள் எனக்கு உத்வேகம் அளித்தன. அவரது ஓவியங்கள் யதார்த்தத்திற்கு மிகவும்  நெருக்கமானவ. ”

தனது வேலையைப் பற்றி அவர் விளக்கும் போது  : “நான் வாழ்க்கை சித்தரிக்கும் ஓவியத்தை விரும்புகிறேன், அதில் புதைந்து இருக்கும் கலாச்சார உரையாடல்களையும் / வெளிப்பாடுகளையும்  ஒவியமாக்குவது  எனக்கு மிகவும் பிடித்த பகுதியாகும். ஒரு குறிப்பிட்ட உருவத்தை வரையும்போது, அதில் கிடைக்கும் எதார்த்தமும், உணர்வும் என்னை என் கலையோடு உணர வைக்கிறது . சில நேரங்களில்,கற்பனையான  உருவங்களை வரைவேன். இல்லையெனில், நாம் அன்றாடம் பார்க்கும் சில சம்பவங்கள் , உதாரணமாக ஒரு கோவிலில் ஒரு பெண் பிரார்த்தனை செய்வது, தெருவில் விளையாடும் குழந்தைகள், மட்பாண்டங்கள் தயாரித்தல் போன்றவற்றைச் வரைய ஆரம்பித்துவிடுவேன் .

ஒரு பெரிய உருவ ஓவியப் படத்தை முடிக்க குறைந்தது 10 நாட்கள் ஆகும் என்று சதாசிவம் கூறுகிறார்.

publive-image ஸ்டில் லைப், மனித உருவ ஓவியம் என ரம்யா சதாசிவத்தின் ஓவியங்கள் இரண்டு லட்சம் வரை விற்கப்படுகிறது.

“செர்ஜ் மார்ஷெனிகோவின் (ரஷ்ய உருவ ஓவியர்) சில படைப்புகளால் ஈர்க்கப்பட்ட பிறகு நான் நிர்வாண உருவப் படங்களை  வரையும் கலையைத் தொடங்கினேன். அவரது படைப்புகள் மிகவும் விவேகமானவை , எதார்த்தை அழுத்தமாக சொல்லுபவை.  இவ்வகையான ஒவ்வியம் சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்பதை நான் ஒருபோதும் உணரவில்லை, அதை மற்றொரு கலை வடிவமாகவே பார்த்தேன், ”என்று சதாசிவம்  கூறுகிறார்.

சதாசிவம் ஆரம்பத்தில் தனது நிர்வாண படைப்புகளை கற்பனையிலிருந்து வரைந்தாலும், இப்போது ஓவியங்களுக்காக காட்சி கொடுக்க தனது நண்பர்கள்  தயங்குவது இல்லையாம் .

“எனது வாழ்க்கையை வடிவமைப்பதில் நண்பர்கள் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார்கள். நிர்வாணமாக காட்சி   கொடுப்பதில் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. மேலும், தங்களை ஒரு கலையின் படைப்பாய் , ஓவியங்களாய்ப்  பார்க்க அவர்களும் ஆர்வப்படுகிறார்கள். இருந்தாலும், அவர்களுக்கு நிஜ வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தாத வாறு  முகத்தின் கட்டமைப்பை அல்லது தலைமுடியின் அமைப்பில்  மாற்றம் செய்துவிடுவேன் ,”என்று  கூறுகிறார் இந்த பெண் கலைஞர்

publive-image

 

தன்னைப் பற்றிய விமர்சனத்தையும், சமூகம் பார்க்கும் பார்வையையும்  எவ்வாறு கையாளுகிறார் என்று கேள்விக்கு , ​​சதாசிவம் கூறுகையில், மனிதர்களைப் பற்றிய  உருவகக் கலை இன்னும் இந்தியாவில் பெயர் சொல்லாத அளவில் தான் உள்ளது. இந்தியாவில் சில கலைஞர்கள் தான் மனித உருவங்களை ஓவியமாக்குகிறார்கள் , ஆனால் சமூகத்திற்கு பயந்து தனது ஓவியத்தை ஆன்லைனில் கூட சமர்பிப்பது இல்லை.  ஆனால், நான் அதை செய்கிறேன். எனக்கு மிரட்டல் விடுக்கும் வண்ணம்  செய்திகள் வரும் ,சில நேரங்களில் சில மனிதர்கள்  என்னை தவறாக கணிக்க விரும்புகிறார்கள்.  வலதுசாரி ஆதிக்க மாநிலத்திலும் அல்லது சென்னை போன்ற பழமைவாத இடத்தில், ஒரு உருவ ஓவியராக இருப்பது கடினம் என்பது எனக்கு தெரியும். ஆனால் விமர்சனத்தை எவ்வாறு சாதகமாக எடுத்துக்கொள்வது என்பதை நான் கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டேன். இந்த கலையை மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

அவர் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கலை கற்பிக்கிறார். அவரது அடுத்த கவனம் எல்ஜிபிடி சமூகம். அவர்களும் மற்ற மனிதர்களைப் போலவே மதிக்கப்பட வேண்டும் என்று சதாசிவம் கருதுகிறார்.

இது பற்றி மேலும் அவர் கூறுகையில், " நான் அவர்களின் உணர்ச்சிகளையும், உறவுகளில் உள்ள நெருக்கத்தையும்   ஒவியமாக்க விரும்புகிறேன். அவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும், அன்பு அனைவருக்கும் பொதுவானது. அதைப் பெறுவதற்கு எனது பணி அவர்களுக்கு உதவுமானால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன், ”என்கிறார் ரம்யா சதாசிவம்.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment