Advertisment

சந்தோஷப்படுவதா? இல்லை வருத்தப்படுவதா? சென்னையில் குறையும் கொரோனா.ஆனால்!

ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளது மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
police innovative punishment, police innovative punishment to lockdown rule break people, lockdown india, lockdown tamil nadu, ஊரடங்கு உத்தரவு, ஊரடங்கை மீறுபவர்களுக்கு போலீஸ் தண்டனை, நூதன தண்டனை, கொரோனா வைரஸ், lockdown chennai, chennai police new punishment to rule break people, corona virus, covid-19, chennai police new punishment, tamil nadu police strict action, coronavirus latest news

chennai corona cases news in tamil : சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளது மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஒட்டு மொத்த நாட்டையும் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவிடம் இருந்து தமிழகமும் தப்பவில்லை. முழு ஊரடங்கு வெளி மாவட்டங்களுக்கு செல்ல தடை அரசின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கு பிறகு மூன்றாம் கட்டத்தை நெருங்கியுள்ளது கொரோனா.

கடந்த 2 வாரங்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் மகிழ்ச்சியான தகவலை கூறுகின்றன. அதே நேரம், தென் மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக தொடங்கியுள்ளது வருத்தம் அளிக்கும் செய்தியாக உள்ளது.

ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்துள்ளதா?

நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் புதியதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,231 இதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே சென்னை நிலவரம் உள்ளது. அதே போல் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாள்தோறும் 30 ஆயிரம் பேருக்கு குறையாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதிலும் நேற்றைய தினம் 42, 369 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் இன்றைய பாதிப்பும் அதிகரித்தே காணப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2,3 தினங்களாக கொரோனா பாதிப்பு 4000-த்தை விட குறைந்தது.அதே போல் கடந்த இரு தினங்களாக சென்னையிலும் கொரோனா பாதிப்பு கேஸ்கள் 2000-த்தை விட குறைந்திருந்தது.ஆனால் அதே நேரம், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு படையெடுக்க துவங்கியுள்ளது. வருத்தம் அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. மதுரை, தேனி பகுதிகளில் அதிகப்படியான கொரோனா பாதிப்பு கேஸ்கள் வர தொடங்கியுள்ளன.

செங்கல்பட்டில் 169 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் 262 பேருக்கும் கள்ளக்குறிச்சியில் 254 பேருக்கும் திருவள்ளூரில் 364 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடியில் 196 பேருக்கும் நெல்லையில் 110 பேருக்கும் தேனியில் 90 பேருக்கும் விருதுநகரில் 289 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 67 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, செங்கல்பட்டு, விருதுநகர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

புதிய கொரோனா கேஸ்கள் 70% க்கும் மேற்பட்டவை மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்தவை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment