Advertisment

ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் முன்பதிவை தெரிவிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி

ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் முன்பதிவு செய்வது குறித்து தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai Corporation asks hotels wedding halls to inform about prior bookings, greater chennai corporation, GCC commissioner Gagandeep Singh Bedi, ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் முன்பதிவை தெரிவிக்க வேண்டும், சென்னை மாநகராட்சி, chennai, covid guidelines

ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் முன்பதிவு செய்வது குறித்து தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

சென்னை மாநகராட்சி ஆணையர் கங்கன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் கோவிட்-19 தொற்றுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, பெருநகர சென்னை கார்ப்பரேஷன் புதன்கிழமை அனைத்து ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள்/ விருந்து அரங்குகள், சமுதாயக் கூடங்கள், கோயில் நிர்வாகத்திடம் விழாக்களுக்காக செய்யப்பட்ட முன்பதிவுகள் குறித்து தாமதமில்லாமல் உடனடியாக தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த உள்ளதாக மாநகராட்சி ஆணையர் கங்கன்தீப் சிங் பேடி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருமண மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களின் முன்பதிவு பற்றிய அனைத்து தகவல்களும் https://covid19.chennaicorporation.gov.in/covid/marriage_hall/ என்ற ஆன்லைன் இணைப்பின் மூலம் பதிவேற்றப்பட வேண்டும் என்று ககந்தீப் சிங் பேடி கூறினார்:

பெருநகர சென்னை மாநகராட்சி திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள், ஹோட்டல்களின் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி மேலும், தமிழக அரசால் வெளியிடப்பட்ட கோவிட்-19 வழிகாட்டுதல்கள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தியது. திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்கள் பகிர்ந்து கொள்ளும் விவரங்களின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த வழிகாட்டுதலுக்கு இணங்க மறுப்பவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் பிரிவு 51-ன் விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Chennai Gagandeep Singh Bedi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment