Advertisment

அதிகரிக்கும் கொரோனா; பரிசோதனை, கண்காணிப்பை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரிசோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,580 பேருக்கு கொரோனா; 22 பேர் உயிரிழப்பு

Chennai corporation decides to increase screening due to corona rise: சென்னை மாநகராட்சியானது, கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, பரிசோதனைகளை அதிகரித்தல், வீட்டுக்கு வீடு கண்காணிப்பு, ஸ்கிரீனிங் மையங்களை மீண்டும் செயல்படுத்துதல் மற்றும் டெலி-கவுன்சிலிங் மூலம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளைப் பின்தொடர்தல் போன்ற உத்திகளை மீண்டும் கொண்டு வந்துள்ளது.

Advertisment

டிசம்பர் 20 முதல், சென்னை முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளன. அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ராயபுரம், அடையாறு மற்றும் வளசரவாக்கம் ஆகிய இடங்கள் கடந்த ஒரு வாரத்தில் மிகக் கடுமையான உயர்வைக் கண்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் 30% பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கிறிதுஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சிறிய கூட்டங்கள் மற்றும் பொது இடங்களில் கொரோனா நெறிமுறைகளை அமல்படுத்தாதது ஆகியவை காரணங்களாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வார்டுக்கும் ஐந்து பேர் வீதம் 1,000 தன்னார்வலர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தத் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று தொற்றுநோய்களுக்கான மக்களைப் பரிசோதிப்பார்கள் மற்றும் வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வார்கள். மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஒமிக்ரான் வகை தொற்றுக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி மட்டுமே அறிகுறிகளாக இருப்பதால், சென்னை மாநகராட்சி இப்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் மீது அதிக கவனம் செலுத்தவுள்ளது. தனிமைப்படுத்தலுக்கான ஸ்டிக்கர்கள் மீண்டும் வரும், தன்னார்வலர்கள் முழு-பரிசோதனை செயல்முறையின் மூலம் நோயாளிகளுக்கு உதவவும், அவர்கள் சிகிச்சை பெறும் வரை அனைத்து தேவைகளுக்கும் உதவவும் உத்தரவிடப்பட்டுள்ளனர்.

22 பரிசோதனை மையங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். மேலும், இப்போது ஐந்து பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன. கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை பயன்படுத்த முடியாததால், மாற்று தளங்களை பார்த்து வருகிறோம். செவ்வாய்கிழமைக்குள் அவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்,'' என்றும் ஆணையர் கூறினார்.

சென்னை வர்த்தக மையம் 800 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் என்றும், மண்டலத்துக்கு ஒன்று என்ற தொலைத்தொடர்பு மையங்களும் செவ்வாய்கிழமைக்குள் இயங்கும், என்றும் ஆணையர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Corona Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment