Advertisment

சென்னையில் வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிப்பது எப்படி? மேயர் பிரியா விளக்கம்

சென்னை மாநகராட்சியில் செய்யப்பட்டுள்ள பருவமழை ஏற்பாடுகள் என்ன? வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிப்பது எப்படி? மேயர் பிரியா விளக்கம்

author-image
WebDesk
New Update
சென்னையில் வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிப்பது எப்படி? மேயர் பிரியா விளக்கம்

சென்னை மாநகராட்சியில் செய்யப்பட்டுள்ள பருவமழை ஏற்பாடுகள் மற்றும் வெள்ளம் போன்ற பிரச்சனைகளை எப்படி புகார் அளிப்பது என்பது குறித்து மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியதாவது,

பெருநகர சென்னை மாநகராட்சி வரவிருக்கக்கூடிய பெருமழையை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் பருவமழை கட்டுப்பாட்டு அறை (ICCC) செயல்பட்டு வருகிறது. இந்த ICCC என்பது அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் திட்டமாகும். இதில், 1913 உதவி மையம், நம்ம சென்னை ஆப் (Namma Chennai App), கட்டுப்பாட்டு அறை, மின்சார வாரியம், மெட்ரோ வாட்டர், காவல், தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்: தொடர் மழை: இந்த 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

இதில் பொதுமக்கள் எளிதாக தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். சென்னை மாநகராட்சியை 1913 மூலமாக எளிதாக தொடர்பு கொள்ளலாம். ஒரே நேரத்தில் 100 பேர் கூட தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர நம்ம சென்னை ஆப் மூலம் வரும் புகார்களை சம்பந்தப்பட்ட மண்டலகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக ஒரு செயலியை தொடங்கி இருக்கிறோம். அதன்மூலமாக மண்டல வாரியாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும், சென்னை மாநகராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப மண்டல வாரியாக பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் புகார்களை கவனித்து வருகின்றனர். வரக்கூடிய புகார்களுக்கு கூடுமானவரை 1 மணி நேரம் முதல் 5 மணி நேரத்திற்குள், நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்.

மேலும், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வரும் புகார்களையும் கண்டறிந்து ICCC மூலமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். ICCC 24 மணி நேரம் செயல்படக்கூடிய வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்,. எனவே பொதுமக்கள் 24 மணிநேரமும் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment