Advertisment

ஒரு தன்னார்வலருக்கு 5 முதல் 10 தெருக்கள் பொறுப்பு: சென்னையில் வீடுவீடாக பரிசோதனை திட்டம்

சென்னை மாநகராட்சி வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள கோவிட்-19 நோயாளிகளைக் கண்காணிக்க தன்னார்வாலர்களை நியமனம் செய்துள்ளது. ஒரு தன்னார்வலர் 5 முதல் 10 தெருக்களை கண்காணிப்பார்கள். இதன் மூலம் சென்னையில் வீடுவீடாக பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஒரு தன்னார்வலருக்கு 5 முதல் 10 தெருக்கள் பொறுப்பு: சென்னையில் வீடுவீடாக பரிசோதனை திட்டம்

சென்னை மாநகராட்சி வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள கோவிட்-19 நோயாளிகளைக் கண்காணிக்க தன்னார்வாலர்களை நியமனம் செய்துள்ளது. ஒரு தன்னார்வலர் 5 முதல் 10 தெருக்களை கண்காணிப்பார்கள். இதன் மூலம் சென்னையில் வீடுவீடாக பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை கண்காணிக்க சென்னை மாநகராட்சி 5000 குவாரண்டைன் காண்காணிப்பாளர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களிலும் இந்த குவாரண்டைன் கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்த தொடங்கியுள்ளது. அவர்களது பணிகளுக்கு ஊதியமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குவாரண்டைன் கண்காணிப்பு பணியாளர்கள் ஒவ்வொருவரும் சென்னை மாநகராட்சியில் உள்ள 5 முதல் 10 தெருக்களுக்கு பொறுப்பேற்பார்கள். குடியிருப்பாளர்களுக்கு கோவிட்-19-இல் இருந்து மீளுதல், கோவிட்-19 தடுப்பு ஆகிய அனைத்து வகைகளிலும் உதவி செய்வார்கள். இதன் மூலம் மாநகராட்சியில் உள்ள 40,000 தெருக்களும் கண்காணிக்கப்படும். மேலும், இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மீறலில் ஈடுபட்டால் அது குறித்த அறிக்கையை அளிப்பார்கள். அந்த அறிக்கைகள் தனியாக பிரிக்கப்பட்டு, மாநகராட்சில் உள்ள 200 வார்டுகளில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை குழுக்களுக்கு அனுப்பப்படும்.

வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ள பெரிய எண்ணிக்கையிலான நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்துதல் தொடர்பான விதிமுறைகளை மீறத் தொடங்கியுள்லனர். இதனால், சென்னை மக்கள் மத்தியில் கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள பல மண்டலங்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்க வாய்ப்புள்ள தெருக்களுக்கு குவாரண்டைன் கண்காணிப்பாளர்களை பணியில் சேர்க்கும் வேலையை செய்யத் தொடங்கியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று ஏற்ப்பட்டவர்கள் உள்ள தெருக்களுக்கு இதன் மூலம் முன்னுரிமை அளிக்கப்படும்.

சென்னை மாநகராட்சியில் 1,045 தெருக்களைக் கொண்ட ஒரு மண்டலத்தில் சனிக்கிழமை குவாரண்டைன் கண்காணிப்பு தன்னார்வலர்கள் 209 பேர் நியமிக்கப்பட்டனர். இன்னும் சில நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

இது குறித்து சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மேகநாத் ரெட்டி ஊடகங்களிடம் கூறுகையில், “இந்த பணியாளர்கள் ஃபோகஸ் தன்னார்வலர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இதற்கு அர்த்தம், கண்காணிப்பில் இருக்கும் கோவிட்-19 குடிமக்களின் நண்பர்கள்” என்று கூறினார்.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நபர்கள், அவர்களின் தொடர்புகள், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்கள், உள்நாட்டு விமான பயணிகள், ரயில் பயணிகள், ஹாட்ஸ்பாட் மாநிலங்களிலிருந்து வந்த பயணிகள் ஆகியோரை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துவதற்கு வசதியாக வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் தனிமை மேலாண்மை முறையை சுகாதார அமைப்பு அமைத்துள்ளது.

மேகநாத் ரெட்டி மேலும் கூறுகையில், “இந்த தன்னார்வ தொண்டர்கள் குடிமக்களுடன் நட்புடன் இருப்பார்கள். கோவிட்-19 தொடர்பான உதவிக்கு குடியிருப்பாளர்கள் அவர்களை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த பகுதியில் கவனம் செலுத்தும் தன்னார்வலர்களின் மொபைல் எண்கள் அப்பகுதி தெருக்களில் வசிக்கும் அனைவருடனும் பகிரப்படும். அவர்கள் மருந்து மற்றும் ஏற்பாடுகளை வழங்க குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு செல்வார்கள்” என்று திரு மேகநாத் ரெட்டி கூறினார்.

தொற்றுநோய்களின் போது ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு உதவ குவாரண்டைன் கண்காணிப்பாளர்களுக்கு உரிமம் பெற்ற ஆய்வாளர்கள் மற்றும் சொத்து வரி மதிப்பீட்டாளர்கள் வழிகாட்டுவார்கள்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சனிக்கிழமை அன்று ஒரு கொரோனா நோயாளி இறந்ததைத் தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், தொற்றுநோய்களின் போது கவனிப்பு தேவைப்படும் எட்டு லட்சம் மூத்த குடிமக்களை மாநகராட்சி அடையாளம் கண்டுள்ளது. அத்தகைய வயதான குடியிருப்பாளர்கள் தங்கள் தெருக்களின் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பாளர்களை உதவிக்கு அழைக்கலாம் என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Tamil Nadu Chennai Coronavirus Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment