Advertisment

சென்னையில் 500 படுக்கைகள் கொண்ட கோவிட் பராமரிப்பு மையம் திறக்க திட்டம்

Chennai Corporation to open 500 beds care center இப்போதைக்கு இந்த மையங்களில் அறிகுறியற்ற நோயாளிகள் மட்டுமே உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu Coronavirus second wave, sero survey results, tamil nadu news, news in Tamil, covid news in Tamil

Chennai Corporation to open 500 beds Tamil News : ஆக்ஸிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட கோவிட் பராமரிப்பு மையத்தைத் திறக்க சென்னை பெருநகர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான கலந்துரையாடல்கள் தற்போது தொடங்கியுள்ளன. தற்காலிகமாக, தெற்கே கிண்டி வர்த்தக மையம், மத்திய மண்டலத்திற்கான கீழ்ப்பாக்கம் உட்புற மைதானம் மற்றும் வடக்கு மண்டலத்திற்கான கே பி பார்க் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Advertisment

இந்த இடங்களை கோவிட் பராமரிப்பு மையங்களாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. ஆக்சிஜன் வழங்குவதற்கான செயல்முறையை மாநில அரசு முடிவு செய்யும் என்று ஒரு அதிகாரி கூறினார். “ஆக்ஸிஜன் குழாய் இணைப்புகளையும் விநியோகத்தையும் நிர்வகிப்பது எளிதல்ல. பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்கள் மட்டுமே அதையெல்லாம் நிர்வகிக்க முடியும். இப்போதைக்கு இந்த மையங்களில் அறிகுறியற்ற நோயாளிகள் மட்டுமே உள்ளனர். இருப்பினும், மாநில அரசு முடிவு செய்தால், அவற்றை நிறுவ நாங்கள் தயாராக இருப்போம்” என்று ஓர் மூத்த நிறுவன அதிகாரி கூறினார்.

பிப்ரவரியில் மூடப்பட்ட கே பி பார்க், இந்த வாரம் மீண்டும் திறக்கப்படும். "கடந்த ஆண்டு அதன் வசதிகளுக்காக நோயாளிகளிடையே பிரபலமாக இந்த பார்க் இருந்தது. இங்கு நான்கு தொகுதிகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றப்படலாம் மாற்றுவதற்கான ஏற்பாடுகளில் எங்களிடம் மேலும் நான்கு தொகுதிகள் உள்ளன. ஆனால் அவற்றில் இரண்டு மட்டுமே இப்போது திறக்கப்படும்” என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

தற்போது, ​​13 கோவிட் பராமரிப்பு மையங்களில் கிடைக்கும் 11,645 படுக்கைகளில், 2,410 படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைப் பெறுவதற்காக, குடிமை அமைப்பு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஜெருசலேம் பொறியியல் கல்லூரி, முகமது சாதக் நர்சிங் கல்லூரி மற்றும் செயின்ட் ஜோசப்ஸ் ஆகியவற்றில், இந்த வாரம் ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பிறகு இவை பொதுமக்களுக்கும் திறக்கப்படும்.

இதற்கிடையில், இந்த மையங்களில் சிறந்த வசதிகளை உறுதி செய்வதற்காக, குடிமக்கள் அமைப்பு நோயாளிகளை அழைக்கவும், சோதனைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. “பொது சுகாதாரத் துறை மற்றும் மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். உணவு, வீட்டைப் பராமரித்தல் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை வழங்க நாங்கள் பொறுப்பு. உணவு மற்றும் தூய்மையின் தரம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவை நல்ல நிலையில் உள்ளன என்பதை உறுதிப்படுத்த அடிக்கடி சோதனைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று மேலும் ஒரு அதிகாரி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Virus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment