Advertisment

சென்னையில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை: 1லட்சம் பேருக்கு தொற்று

chennai corona cases: சென்னை பெருநகராட்சியின் காய்ச்சல் கண்காணிப்பு குழு நடத்திய பரிசோதனையின் மூலம் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chennai corona cases

சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள வீடுகளில் காய்ச்சல் கண்டறியும் குழு நடத்திய பரிசோதனையில் 4.94 லட்சம் பேருக்கு அறிகுறிகள் காணப்பட்டது. அதில் 96,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடந்த வார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

ராயபுரம், தண்டையார்பேட்டை, மணலி, திருவொற்றியூர் மற்றும் மாதவரம் பகுதிகளை உள்ளடக்கிய வடசென்னையில் சோதனையின்போது 1.97 லட்சம் பேருக்கு அறிகுறிகள் காணப்பட்டது. அதில் 31,219 பேருக்கே கொரோனா உறுதி செய்யப்பட்டது. இது மத்திய சென்னையின் எண்ணிக்கையை விட சற்று குறைவுதான். அங்கு 1.8 லட்சம் பேருக்கு அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்ததில் 37,720 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகியவை அடங்கும்.

வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார், பெருங்குடி மற்றும் சோழங்கநல்லூர் பகுதிகளை உள்ளடக்கிய தென்சென்னையில் 1.16 லட்சம் பேருக்கு காய்ச்சல் கண்டறியும் குழுவால் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 27,391 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று பகுதிகளிலும் மாநகராட்சி பணியாளர்கள் தினந்தோறும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என வீடு வீடாக சென்று கண்காணிக்கின்றனர். தினமும் 19.8 வீடுகளில் பரிசோதித்துள்ளனர். பல குடியிருப்பு வாசிகள் காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்களிடம் விவரங்களை தர மறுத்துவிட்டனர். இருப்பினும் மொத்தமாக காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்களால் 55 கோடி வீடுகளுக்கு வருகை தரும் தரவு உருவாக்கப்பட்டுள்ளது.

வளசரவாக்கம் மண்டலத்தில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13,971 வீடுகளில் கண்காணிப்பு குழு அறிகுறி உள்ளவர்களை அடையாளம் கண்டுள்ளது. சோழிங்கநல்லூர் பகுதியில் குறைந்தபட்சமாக 1,678 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

காய்ச்சல் கண்காணிப்புக்காக 15 மண்டலங்களுக்கும் 12,000 பணியாளர்கள் மாநகராட்சியால் அனுப்பப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Coronavirus Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment