Advertisment

முழு பொதுமுடக்கத்தால் சென்னையில் கொரோனா தொற்று குறைந்துள்ளதா?

சென்னையில் ஜூன் 19 முதல் ஜூலை 5-ம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று 53 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
முழு பொதுமுடக்கத்தால் சென்னையில் கொரோனா தொற்று குறைந்துள்ளதா?

சென்னையில் ஜூன் 19 முதல் ஜூலை 5-ம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று 53 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் பதிவான தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் தலைநகர் சென்னையில் மட்டும் 70%க்கும் அதிகமான தொற்று இடம் பெற்றது. சென்னை கொரோனா வைரஸ் பரவல் மையமாக மாறுகிற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அப்போதுதான், நிபுணர்கள் குழுவின் பரிந்துரைப்படி, சென்னையில் ஜூன் 19ம் தேதி முதல் ஜூன் 31-ம் தேதி வரை 12 நாட்கள் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பின்னர், தமிழகம் முழுவது பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டபோது சென்னையில் முழு பொதுமுடக்கம் ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த சூழலில்தான், தலைநகர் சென்னையில் ஜூன் 19முதல் ஜூலை 5 வரை அமல்படுத்தப்பட்ட முழு பொதுமுடக்கத்தால் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 53% குறைந்துள்ளது தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னையில் ஜூன் 30ம் தேதி வரை 58,561 கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவான நிலையில், ஜூலை 1 முதல் ஜூலை 12-ம் தேதி வரை 18,831 தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது. ஜூலை 1 முதல் தொற்று எண்ணிக்கை 32 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஜூன் மாதத்தில் இருந்ததை விட குறைவாக உள்ளது.

சென்னையில் முழு பொது முடக்கம் அமல்படுத்துவதற்கு முன்பு, ஜூன் 19-ம் தேதி வரை 38,327 தொற்று வழக்குகள் பதிவானது. ஜூன் 19 முதல் ஜூன் 30-ம் தேதி வரை 52% தொற்று அதிகரித்து 20,234 தொற்று வழக்குகளாக பதிவாகி உள்ளது.

ஜூலை 5ம் தேதி சென்னையில் முழு பொதுமுடக்கம் தளர்த்தப்பட்ட பின்னரும் தொற்று வழக்குகள் உறுதிசெய்யப்பட்டு வருகிறது. சென்னையில் தொற்று எண்ணிக்கை 1747-ல் இருந்து 1168 வரை குறைந்துள்ளது. சென்னையில் தற்போது ஜூன் முதல் இரண்டு வாரங்களில் பதிவு செய்யப்பட்ட அதே விகிதத்தில் தொற்று எண்ணிக்கை பதிவு செய்து வருகிறது.

ஜூன் 19 முதல் ஜூலை 5 வரை முழு பொதுமுடக்கத்தின் விளைவாக ஜூலை முதல் வாரத்தில் 5,000 முதல் 10,000 வரை கொரோனா வைரஸ் பரிசோதனை அதிகரிக்கப்பட்டது.

சென்னையில் முழு பொதுமுடக்கத்தின் விளைவாக கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 53% குறைந்துள்ளது என்பது தற்காலிகமானதா அல்லது இந்த குறைவு நீடிக்குமா என்பது குறித்து மேலும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்களை மக்கள் வேலை செய்யும் இடங்களுக்கு மக்கள் நெரிசலான பகுதிகளுக்கும் நகர்த்தும்போது தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் உத்தி மேலும் வலுப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னையில் ஜூலை 11ம் தேதி வரை சென்னை மாநகராட்சி நடத்திய 15,704 முகாம்களில் இதுவரை 9.91 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த முகாம்களில் இருந்து பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட 44,616 மாதிரிகளில் 11,663 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 25.46%தொற்று சதவீதம் ஆகும்.

ஊடகங்களிடம் கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர், ஜி.பிரகாஷ் கூறுகையில், சென்னையில் கூட்ட நெரிசலான சந்தைகளை சந்தை ஒழுங்குமுறைக் குழு கண்காணிக்கும். 81 கோட்ட உதவி பொறியாளர்கள் இக்குழுவிற்கு தலைமை தாங்கி மீன், இறைச்சி கடைகள், காய்கறி சந்தைகள், தற்காலிக கடைகள் ஆகிய இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வார்கள். மேலும், விற்பனையாளர்கள் மக்கள் முகக் கவசம் அணிவதை உறுதி செய்வார்கள். சென்னையில் அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ஹேண்ட் சானிடைசர் இருக்கிறதா என்று கண்காணிக்க 32 வட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.” என்று கூறினார்.

இதனிடையே, சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பது நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. தற்போது 24 சதவீத நோயாளிகள் மட்டும்தான் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை ராயபுரம் மண்டலத்தில் ஜூன் மாதம் அதிக அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை காணப்பட்ட நிலையில், இப்போது 14 சதவீத நோயாளிகள் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல தண்டையார்பேட்டையில் 17 சதவீத வழக்குகளும் திருவிக நகரில் 20 சதவீதம் வழக்குகளும் உள்ளன.

இருப்பினும், சென்னையில் ஜூலை முதல் வாரத்தில் தினசரி கொரோனா வைரஸ் பரிசோதனை எண்ணிக்கை 10,000 என்று இருந்த நிலையில் தற்போது 8,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment