Advertisment

கண்ணாடி பாட்டில்கள்... டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் எச்சரிக்கை!

கண்ணாடி மதுபாட்டில்களை திரும்ப பெற நடவடிக்கை இல்லாவிட்டால், மலைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும்; சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

author-image
WebDesk
New Update
Tamil News Today Highlights: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மதுபானம் விற்க தடை - மாநில தேர்தல் ஆணையம்

Chennai HC warns TASMAC for glass bottles issued in Wildlife areas: மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், இல்லாவிட்டால் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

மலைவாசஸ்தலங்களை ஒட்டிய வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கண்ணாடி மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையதளத்தில் வெளியான வீடியோ அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ் குமார் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தப்போது, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி அருந்துவோர், கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதியில் வீசிச் செல்வதால், அவற்றின் மீது விலங்குகள் மிதிக்கும் போது காயமடைந்து, அடுத்த மூன்று மாதங்களில் இறந்து விடுவதாக நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.  எனவே, கண்ணாடி பாட்டில்களுக்குப் பதில், வேறு மாற்று ஏற்பாடு எதுவும் செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினர்.

இதையும் படியுங்கள்: இரட்டை இலை சின்ன வழக்கு.. டிடிவி தினகரனுக்கு மீண்டும் சம்மன்!

மேலும், கண்ணாடி பாட்டில்களை விற்பனை செய்த பின்னர், அவற்றை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கவும், மற்றும் அதற்கான செயல் திட்டத்தை வகுக்கவும் அறிவுறுத்திய நீதிபதிகள், ஏப்ரல் 25ம் தேதிக்குள் திட்டத்தை தாக்கல் செய்யும்படி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

அந்த திட்டத்தில் திருப்தி அடைந்தால் தொடர்ந்து மலைவாசஸ்தலங்களில் டாஸ்மாக் கடைகளை நடத்த அனுமதி அளிப்பதாகவும், இல்லாவிட்டால் மலைவாசஸ்தலங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்த நீதிபதிகள், இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court Tasmac
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment