Advertisment

மக்கள் ஊரடங்கு விதிகளை மீறினால் நடவடிக்கை: ஐகோர்ட்

ஊரடங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai high court advice to public in lock down period, சென்னை உயர் நீதிமன்றம், ஊரடங்கு, பொது முடக்கம், chennai high court order to police, police may take action on trespasser, ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், tamil news, latest tamil nadu news, latest chennai high court news, latest news in tamil

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லக் கூடிய பொது மக்களைத் துன்புறுத்த கூடாது என உத்தரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன்,நீதிபதி அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே இது தொடர்பாக தமிழக டிஜிபி, காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை சமர்பித்தனர். மேலும், 4.32 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 1.59 லட்சம் மக்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 3 லட்சத்து 79 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 5 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்கள் சமூக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதை மீறுபவர்கள் மீது காவல்துறை சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment