தமிழக அரசுக்கு ஒரு கோடி அபராதம்..... உயர்நீதிமன்றம் விளாசல்!

2000-ஆம் ஆண்டு முதல் 50 சதவீத இடங்களைப் பெறுவதில் அலட்சியமாக இருந்ததால் இந்த அபராதம் ...

மருத்துவர் காமராஜர் உள்பட சிலர், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், மருத்துவ மேற்படிப்பில் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று தனியார் மருத்துவக்கல்லூரி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீடு இடங்கள் குறித்த தகவலை கல்லூரி இணையதளத்தில் வெளியிடவும் ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கு பொருந்தாது என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தனியார் மருத்துவக்கல்லூரிகளும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 50 சதவீத இடங்களை ஒதுக்குகிறதா என்பதை இந்திய மருத்துவ கவுன்சிலும், தமிழக அரசு கண்காணிக்கவில்லை. மேலும், 2000-ஆம் ஆண்டு முதல் 50 சதவீத இடங்களைப் பெறுவதில் அலட்சியமாக இருந்ததால் இந்த அபராதம் விதிக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த ஒரு கோடி ரூபாயை கீழடி அகழ்வாாய்ச்சிக்கு வழங்க தமிழக அரசுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கவும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஒரு கோடியை கீழடி அகழ்வாராய்ச்சிக்கு வழங்க தமிழக அரசிற்கும், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

×Close
×Close