Advertisment

ஜெ.நினைவு இல்லத்தை திறக்க தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

ஜெயலலிதா மறைவுக்குப் பின், தங்களை வாரிசுகளாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதையும் மனுவில் சுட்டிக் காட்டினர்

author-image
WebDesk
New Update
ஜெ.நினைவு இல்லத்தை திறக்க தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, திபக் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்ததுது.

Advertisment

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவகத்தின் அருகே திறந்து வைத்தார். இதனையடுத்து, நாளை ( ஜனவரி 28) ஜெயலலிதா வாழ்ந்த  போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக முதல்வர் திறந்து வைக்கிறார்.

 

 

 

இந்நிலையில், இன்று வழக்கின் விசாரணையை எடுத்துக் கொண்ட நீதிபதி சேசஷாயி , "ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை நினைவுச் சின்னமாக நாளை திறக்க அனுமதிப்பதாகவும், ஆனால், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை"  என்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லம் நினைவில்லமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என,17.08.2017 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து, அந்த இல்லத்தைக் கையகப்படுத்த தமிழ் வளர்ச்சித்துறை 5.10.2017 அன்று நிர்வாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அந்த நிலம் மற்றும் இல்லத்தைக் கையகப்படுத்துவதற்கான பூர்வாங்க அறிவிப்பு 28.06.2019 அன்று வெளியிடப்பட்டது. இதன்பின், 6.5.2020 அன்று இதற்கான உறுதி ஆவணம் வெளியிடப்பட்டது.

‘வேதா நிலையம்’ இல்லத்தில் உள்ள மரச்சாமான்கள், புத்தகங்கள், நகைகள் உள்ளிட்டவை கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. எனவே, கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவடையும் வரை, அங்குள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை அதன் பராமரிப்புக்காக அரசுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதனால், அந்த இல்லம், மற்றும் அசையும் சொத்துகளை தற்காலிகமாக அரசுடைமையாக்கவும், ‘வேதா நிலையம்’ இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’ அமைக்கவும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவசர சட்டத்தைப் பிறப்பித்தார்.

இந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்வரும், துணை முதல்வர், தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாகவும், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் உறுப்பினர் செயலாளராகவும் உள்ளனர்.

இதற்கிடையே, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர், வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின், தங்களை வாரிசுகளாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதையும் மனுவில் சுட்டிக் காட்டினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment