Advertisment

மெரினா கடற்கரையில் இயங்கும் 2000 கடைகளை நீக்க உத்தரவு...

கடை உரிமையாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க மாநகராட்சி ஏற்பாடு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை : சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வரவேற்றுக் கொண்டே  இருக்கும் ஒரு பகுதி. அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதி, ஜெ. சமாதி, மற்றும் கலைஞர் சமாதியை பார்ப்பதற்காகவே கடற்கரைக்கு வரும் வெளியூர்காரர்களின் எண்ணிக்கை அதிகம்.

Advertisment

இந்த கடற்கரை பகுதி தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைத்தபாடில்லை. இதற்கு மத்தியில் மீனவர்கள் 12 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை மட்டுமே நாட்டு படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்று மத்திய அரசாணை பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முராரி கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வெண்உம் என்று கோரியும் மீனவர்கள் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் பீட்டர் ராயன் வழக்கு பதிவு செய்திருந்தார்.

உயர் நீதிமன்றம் இந்த வழக்கினை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பது ஏன் என்று கேள்வியெழுப்பியதுடன், கடற்கரைப் பகுதியை தூய்மையாக பாதுகாக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையர் ஆகியோர் காலையில் சென்று மெரினாவை பார்வையிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மெரினா கடற்கரை கடைகளை அகற்ற உத்தரவு

பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட மாநகராட்சி, தங்களின் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் மெரினாவில் உள்ள சிறு கடைகள் முறைப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டது என்றும் மூன்று ஷிஃப்டுகளில் 250 பணியாளர்கள் மெரினாவை தூய்மைப்படுத்தி வருகின்றனர் என்றும், 1544 கடைகளுக்கு மெரினாவில் கடை வைக்க உரிமம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனை விசாரித்த வினித் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மெரினா கடற்கரையில் உணவகங்கள் வைக்கப்படுவதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்துகள் இருக்கிறதா என்பதை அறிந்து திட்டங்கள் போடப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்கள் ?

மேலும் மீனவர்களின் கடைகளை அகற்றி, ஒழுங்குப்படுத்த ஏன் இதுநாள் வரை நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள். 3 அல்லது நான்கு மாதங்களுக்குள்ளாக அவர்களுக்கு கடைகள் அமைத்து தரப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜகோபால் கூறினார்.

மேலும் படிக்க : காற்று வாங்க போனேன்… கட்டணம் கட்டி வந்தேன்! மெரினாவில் வாகனம் நிறுத்த கட்டண வசூல்!

இது தொடர்பாக மேலும் பேசிய நீதிபதிகள் “மெரினாவில் ஏற்கனவே சுமார் 2000 கடைகள் இருப்பதாக நாங்கள் அறிகின்றோம். அவை அனைத்தையும் நீக்கிவிட்டு குறைந்த எண்ணிக்கையாலான கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கலாம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அந்த கடை வியாபாரிகளின் முழுத்தகவல்களும் அடங்கிய அடையாள அட்டைகளை மாநகராட்சி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

Marina Beach
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment