கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க இடைக்காலத் தடை

அரசின் நடவடிக்கை கோவிலுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் அரசின் இந்த செயல், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிரானது.

By: Updated: November 23, 2019, 02:19:17 PM

Chennai high court stayed TN government’s operation to give the encroached temple lands : கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்ய கோரி சேலத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணை மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்து இன்று உத்தரவிட்ட நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு, கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் வரண்முறை செய்தால் அது கண்டிப்பாக  கோவில் சொத்துக்களை எல்லாம் சுத்தமாக இல்லாமல் ஆக்கிவிடும். அரசின் நடவடிக்கை கோவிலுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் அரசின் இந்த செயல், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிரானது. எனவே, கோவில் நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் இந்த அரசாணைக்கு தடை விதிக்க முகாந்திரம் உள்ளது. அதனால்,  இந்த அரசாணைக்கு தடை விதிக்கின்றோம்.

கோவில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தாமலும், அந்த
சொத்தை பழைய நிலைக்கு கொண்டு வராமலும் இருந்த அதிகாரிகள் மீது இந்து சமய
அறநிலையத்துறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டதா?
என்பது குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : ”இந்தியர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது” – பாஜக எம்.பியின் தனிநபர் மசோதா

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d %e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d 5 %e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X