Advertisment

'1,689 பேரிடம் ரூ.26 கோடி மோசடி' - சிக்கிய கேரளா ஃபேஷன் ஜுவல்லரி

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலும் பல்வேறு தங்க நகை திட்டங்கள் மூலம் சுமார் 1,689 வாடிக்கையாளர்களிடமிருந்து 25.78 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'1,689 பேரிடம் ரூ.26 கோடி மோசடி' - சிக்கிய கேரளா ஃபேஷன் ஜுவல்லரி

சென்னையில் மயிலாப்பூர், அண்ணா நகர், புரசைவாக்கம், வளசரவாக்கம் ஆகிய இடங்களில் கே.எப்.ஜே (கேரளா ஃபேஷன் ஜுவல்லரி) என்ற பெயரில் நகைக்கடை உள்ளது.

Advertisment

இந்நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர பல்வேறு நகை சேமிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து பழைய தங்க நகைகளையும், பணத்தையும் வாங்கிக் கொண்டது. ஆனால், நகைச்சீட்டு முதிர்வு தேதி முடிந்த பின்னரும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தையோ, தங்கத்தையே திருப்பிக் கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதனையடுத்து, இந்நிறுவனம் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் அனைத்தும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணையில், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலும் பல்வேறு தங்க நகை திட்டங்கள் மூலம் சுமார் 1,689 வாடிக்கையாளர்களிடமிருந்து 25.78 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அந்நிறுவனத்தின் இயக்குநர்களான சகோதரர்கள் சுஜித் செரியன் மற்றும் சுனில் செரியன் ஆகியோர், பொருளாதார காவல் துறையினர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் ஜாமீன் மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு வைப்புத்தொகையாவர் நலன் காப்பீட்டின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தால் ஜாமீன் மறுக்கப்பட்டது.விசாரணையின் போது பொருளாதார குற்றப்பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இந்தக் குற்றச்சம்பவத்தில் மேலும் சில குற்றவாளிகளைத் தேடி வருவதால், ஜாமீன் வழங்கக்கூடாது என வாதாடியது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் மீது மேலும் பல புகார்கள் காவல் துறைக்கு வந்துகொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் அனைத்து கிளைகளும் தற்காலிமாக மூடப்பட்டுள்ளன. தங்கம் தொடர்பான வணிகங்களில் KFJ க்கு நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Crime
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment