scorecardresearch

சென்னையில் அம்மா உணவகம் மீது தாக்குதல்; ஸ்டாலின் உடனடி நடவடிக்கை

அதிமுக வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகத்தில் அடையாளம் தெரியாத இரு நபர்கள், அம்மா உணவகத்தின் முன்பு வைக்கப்பட்ட போர்டை உடைத்து தூக்கி விசுகின்றனர்.

சென்னையில் அம்மா உணவகம் மீது தாக்குதல்; ஸ்டாலின் உடனடி நடவடிக்கை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரபரப்புகள் நிறைவடைந்து, திமுக தலைவர் ஸ்டாலின் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக வின் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதிமுக திமுக தேர்தல் வரலாற்றில் இதுபோல் நிகழவில்லை என்ற பேச்சுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், அதிமுக வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகத்தில் அடையாளம் தெரியாத இரு நபர்கள், அம்மா உணவகத்தின் முன்பு வைக்கப்பட்ட போர்டை உடைத்து தூக்கி வீசு, கலவரத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், அம்மா உணவகத்தின் உள்ளேயும் சென்ற அந்த அடையாளம் தெரியாத நபரக்ள், அங்குள்ள சிறு போர்டுகளை அவர்கள் உடைத்து வெளியே வீசுகின்றனர்.

அப்போது, அம்மா உணவக ஊழியர் மற்றும் இரு பெண்கள் நடப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். அம்மா உணவகத்தின் எதிரே வசிக்கும் பெண் ஒருவர், நடப்பதை வீடியோவாக பதிவு செய்த நிலையில், அதை அதிமுக அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், திமுக தொண்டர்கள் இந்த விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், அம்மா உணவக ஊழியர்களை தாக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தது. மேலும், அம்மா உணவக போர்டுகள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து, அதிமுக வினர் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

அதிமுக ட்விட்டரில் திமுக வை குற்றம் சுமத்தி இருந்த நிலையில், திமுக முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் ட்விட்டரில் பதில் பதிவை பதிவிட்டுள்ளார். அவரது பதிவின் அடிப்படையில், இந்த சம்பவம் மதுரவாயல் பகுதியில் நடைபெற்றிருப்பது தெளிவாகிறது. அவரது பதிவில், ‘மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அந்த இருவரை கழகத்திலிருந்து நீக்கவும் கழகத்தலைவர் ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திமுக சார்பில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், அம்மா உணவக போர்டை உடைத்தெறிந்த திமுக தொண்டரக்ள் இருவரும், திமுக நிர்வாகிகள் முன்னிலையில் மீண்டும் உடைத்தெறிந்த போர்டை அதே இடத்தில் வைத்து ஆணி அடித்து சரி செய்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai jj nagar amma canteen unknown persons boards