Advertisment

மெரினாவில் கண்ணகி சிலை சேதம்: போலீஸ் விசாரணை

kannagi statue News : சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கண்ணகியின் சிலை மற்றும் பீடம் சேதம் அடைந்தது கண்டறியப்பட்டது

author-image
WebDesk
New Update
மெரினாவில் கண்ணகி சிலை சேதம்: போலீஸ்  விசாரணை

சென்னையின் மெரினா கடற்கரையில் வைக்கபட்டுள்ள சிலப்பதிகார காப்பியத்தின் நாயகியான கண்ணகியின் சிலை மற்றும் பீடம் சேதம் அடைந்தது கண்டறியப்பட்டது.

Advertisment

நிவர் புயலால் வீசிய சூறாவளி மற்றும் கனமழை காரணமாக கண்ணகி சிலை மற்றும் பீடம் சேதமடைந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

சிலையை ஆய்வு செய்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் சேதத்தை சரிசெய்யும் பணியைத் தொடங்கினர்.

சி.சி.டி.வி கேமரா கண்காணிப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் பெரிய நடமாட்டம் இல்லை என்றும், சேதம் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தனர்.

தி.மு.க முதன்முதலில் 1967 தமிழ்நாடு சடமன்றத் தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடித்த போது சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகிக்கு சிலை வைக்கபட்டது.

டான்சி நிலபேர வழக்கில் தண்டணை பெற்ற ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றது செல்லாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்புற்றார். 2001ம் ஆண்டு அன்று இரவோடு இரவாக கண்ணகி சிலை அங்கிருந்து அகற்றபட்டது. சரக்குந்து மோதி, அதன் பீடம் சேதமடைந்துவிட்டதால் சிலை அகற்றப்பட்டதாக அரசு விளக்கம் கூறியது.

கண்ணகி சிலை அகற்றப்பட்டதற்கு திமுக உட்பட பல அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் எழுத்தாளர்களும் தமிழறிஞர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கடற்கரையில் வேறு ஒரு இடத்தில் கண்ணகி சிலை நிறுவப்படும் என்று அரசு அறிவித்தது. எனினும் சிலையை மீண்டும் நிறுவவே இல்லை.

2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி மீண்டும் அமைந்தது. இதன் பிறகு அருங்காட்சியகத்தில் வைக்கபட்டிருந்த சிலையை மீண்டும் எடுத்து சிலையை புணரமைத்து 2016 ஜூன் 3 அன்று மீண்டும் அதே இடத்தில் வைக்கபட்டது.

Dmk Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment