Advertisment

வேகம் எடுக்கும் மெட்ரோ பணிகள்: பூந்தமல்லியில் போக்குவரத்து மாற்றம்

Chennai Tamil News: சென்னை மெட்ரோ பணியின் காரணமாக பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சாலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
கோவில்கள் பாதிக்காத வகையில் மெட்ரோ ரயில் திட்டம்: நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

Source: CMRL

Chennai Tamil News: சென்னை மெட்ரோ பணியின் காரணமாக பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சாலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

சென்னையிலுள்ள பூந்தமல்லி டிரங்க் ரோட்டில் இருந்து போரூரில் அருகே செல்லும் பூந்தமல்லி பைபாஸ் சந்திப்பு வரை, சி.எம்.ஆர்.எல். பணி காரணத்தால் போக்குவரத்து பாதை மாற்றப்பட்டுள்ளது. பூந்தமல்லி புறவழிசாலையில் இதற்கான போக்குவரத்து மாற்றுப்பாதை அமைக்கப்படும் என ஆவடி போக்குவரத்து போலீசார் கூறியுள்ளார். 

இந்த ஏற்பாடுகள் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 15 வரை பின்பற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மீஞ்சூர் செல்ல விரும்பும் அனைத்து வாகனங்களும், பூந்தமல்லி பைபாஸில் இடதுபுறமாக சென்னை ORR சர்வீஸ் சாலை வழியே செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். 

வண்டலூர் பகுதியில் இருந்து சென்னை ORR வழியாக வரும் வாகனங்கள், பூந்தமல்லி மற்றும் பிற பகுதிகளுக்கு செல்ல விரும்பினால் பூந்தமல்லி புறவழிச்சாலையின் இடதுபுறம் அமைக்கப்பட்டிருக்கும் பாதையில் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Chennai Metro Poonamalle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment