scorecardresearch

மார்ச் மாதம் 69.99 லட்சம் பயணிகளை சுமந்த சென்னை மெட்ரோ: செய்திக்குறிப்பு வெளியீடு

சுமார் 3.55 லட்சம் பயணிகள் டோக்கன் முறையையும், 5,393 பயணிகள் குழு டிக்கெட் முறையையும் பயன்படுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai metro

சென்னை மெட்ரோ ரயிலில் மொத்தம் 69.99 லட்சம் பயணிகள் கடந்த மார்ச் மாதம் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பயணிகளின் எண்ணிக்கை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரியில் 66.07 லட்சம் பயணிகளும், பிப்ரவரியில் 63.69 லட்சம் பேரும், மார்ச் மாதத்தில் 69.99 லட்சம் பயணிகளும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, மார்ச் 10ம் தேதி, அதிகபட்சமாக 2.58 லட்சம் பேர் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதத்தில், மொத்தம் 21.61 லட்சம் பயணிகள் QR குறியீடு டிக்கெட் முறையைப் பயன்படுத்தினர் மற்றும் 44.76 லட்சம் பயணிகள் பயண அட்டை டிக்கெட் முறையைப் பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர்.

சுமார் 3.55 லட்சம் பயணிகள் டோக்கன் முறையையும், 5,393 பயணிகள் குழு டிக்கெட் முறையையும் பயன்படுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai metro rail limited 69 lakhs passengers travelled

Best of Express