Chennai News Updates: ஆர்.எஸ்.எஸ் குறித்த ஸ்டாலின் விமர்சனத்திற்கு வானதி சீனிவாசன் பதில்

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanathi Srinivasan MK Stalin

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

  • Oct 02, 2025 21:18 IST

    இந்தியா - சீனா இடையே 5 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நேரடி விமானச் சேவைகள், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) வியாழக்கிழமை அறிவித்துள்ளது. 

    கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையேயான விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. கிழக்கு லடாக் எல்லையில் நிலவிய பதற்றத்தைத் தொடர்ந்து இந்தச் சேவைகள் மீட்டெடுக்கப்படவில்லை. தற்போது, இந்தியாவிலும் சீனாவிலும் உள்ள குறிப்பிட்ட இடங்களை இணைக்கும் நேரடி விமானச் சேவைகள், அக்டோபர் மாத இறுதியில் மீண்டும் தொடங்கலாம். எனினும், இது சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் வணிக முடிவுகள் மற்றும் அனைத்து இயக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைப் பொறுத்தது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக, இரு நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் நேரடி விமானங்களைத் தொடங்குவது மற்றும் விமான சேவை ஒப்பந்தத்தை மாற்றுவது குறித்துத் தொழில்நுட்ப அளவில் விவாதம் நடத்தியுள்ளனர்.

    இந்தியா, சீனாவுடனான விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது, விசா வழங்குதலைச் சீராக்குவது ஆகிய கோரிக்கைகளை சீனா கடந்த சில ஆண்டுகளாக முன்வைத்து வந்தது. இந்த விவகாரம், ஜனவரி மாதம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் பெய்ஜிங் பயணத்தின்போதும், ஆகஸ்ட் மாதம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி புது டெல்லிக்கு வருகை தந்தபோதும் விவாதிக்கப்பட்டு, "விரைவில்" நேரடி விமான இணைப்பைத் தொடங்க இரு தரப்பும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இண்டிகோ (IndiGo) விமான நிறுவனம் அக்டோபர் 26 முதல் கொல்கத்தாவுக்கும் குவாங்சோவுக்கும் இடையே தினசரி நேரடி விமானங்களை மீண்டும் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. மேலும், டெல்லிக்கும் குவாங்சோவுக்கும் இடையே நேரடி விமானங்களை விரைவில் அறிமுகப்படுத்தவும் இண்டிகோ திட்டமிட்டுள்ளது.



  • Oct 02, 2025 19:40 IST

    ஆர்.எஸ்.எஸ் குறித்த ஸ்டாலின் விமர்சனத்திற்கு வானதி சீனிவாசன் பதில்

    ஆர்.எஸ்.எஸ் குறித்த முதல்வரின் விமர்சனத்திற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவிக்கையில், “கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட்டவர் ஆர்.எஸ்.எஸ் தான். கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட ராஜ்நாத் சிங் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் தான்” என்று கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Oct 02, 2025 18:32 IST

    ஆர்.எஸ்.எஸ் செய்ததை முதலமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும் - எல். முருகன்

    இந்த நாட்டை கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை முதலமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும் என சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்



  • Oct 02, 2025 18:28 IST

    டெல்லி பிரார்த்தனைக் கூட்டத்தில் மோடி

    காந்தி ஜெயந்தியை ஒட்டி டெல்லியில் உள்ள காந்தி ஸ்மிருதியில் பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உள்ளார்



  • Oct 02, 2025 17:58 IST

    அகமதாபாத் டெஸ்ட் - முதல் நாள் ஆட்டம் நிறைவு

    இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயானடெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுற்றது. முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 162 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா 121 ரன்கள் சேர்த்துள்ளது.



  • Oct 02, 2025 17:38 IST

    தலைமைச் செயலகத்தை சுற்றி சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் கூடாது - சென்னை கமிஷ்னர் அருண் அறிவுறுத்தல்

    தலைமைச் செயலகத்தை சுற்றி சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் கூடாது. காவல் ஆய்வாளர் அனுமதியின்றி சந்தேக நபர்களை அடைக்க கூடாது. விசாரணை கைதிகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டும். விசாரணையின் போது துன்புறுத்தல் கூடாது. பெண்கள், சிறுவர்கள், முதியவர்களை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என காவல்துறையினருக்கு சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்



  • Oct 02, 2025 17:20 IST

    புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை

    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது



  • Oct 02, 2025 16:40 IST

    டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள்

    டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்



  • Oct 02, 2025 16:28 IST

    தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

    தங்கம் விலை காலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 560 குறைந்திருந்த நிலையில், மாலை மீண்டும் அதே அளவுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இன்று ஒரு சவரன் தங்கம் ரூ. 87,600 என்ற விலைக்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 10,950 என்ற விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

     

     

     



  • Oct 02, 2025 16:20 IST

    விஜய் மீது செருப்புகளும் தேங்காய்களும் வீசப்பட்ட காட்சிகள் வெளியானது

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சமீபத்தில் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது, நெரிசல் மிகுந்த அந்தச் சூழலில் அவர் மீது செருப்புகளும் தேங்காய்களும் வீசப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன. 

    Video: Puthiya Thalaimurai



  • Oct 02, 2025 16:18 IST

    கரூர் சம்பவத்துக்கு காரணமானவர், கரூருக்கு போகவில்லை: சீமான்

    கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு காரணமானவர், கள்ளக்குறிச்சிக்கு போகவில்லை. கரூர் சம்பவத்துக்கு காரணமானவர், கரூருக்கு போகவில்லை. 

    இன்று இந்த இடங்களுக்கு வரும் பாஜகவும், காங்கிரஸும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ஏன் வரவில்லை? கொடநாடு கொலை, ஆந்திரா காட்டிற்குள் தமிழர்கள் சுட்டுக்கொன்றதை பற்றியெல்லாம் இவர்களெல்லாம் பேசாதது ஏன்? இந்த அரசியலை எப்படி பார்ப்பது?

    விருதுநகரில்  சீமான் பேட்டி



  • Oct 02, 2025 16:17 IST

    முதலவர் மீது விஜய்க்கு மதிப்பில்லை: விருதுநகரில் சீமான் பேட்டி

    CM சார் என விஜய் கூறுவதே சின்னப் பிள்ளைகள் விளையாட்டிற்கு அழைப்பது போல் இருக்கிறது; முதலவர் மீது விஜய்க்கு மதிப்பில்லை என்றாலும் அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு மதிப்பு தர வேண்டும்.

    விருதுநகரில் சீமான் பேட்டி



  • Oct 02, 2025 15:57 IST

    விஜய் மீது ஏன் வழக்கு இல்லை? டிகேஎஸ் இளங்கோவனின் விளக்கம்

    கரூர் துயரச்சம்பவம் குறித்து விசாரிக்க, அரசு தரப்பில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது; அதன் அறிக்கை வந்தபின்னரே குற்றவாளி யாரென முடிவாகி, அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதுவரை விஜய் பேசும் இடம் வெளியே பேசிவிட்டு சென்றவர் மட்டுமே.

    இதற்கிடையே சம்பவ இடத்தில் தண்ணீர், உணவு போன்ற வசதிகள் இல்லை போன்ற புகார்களில் உள்ளூர் நிர்வாகிகள் மீது உள்ள சில தவறுகள் தெரியவந்தால், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    தவெக சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் அந்த இடத்திலிருந்து சில ஏற்பாடுகளை செய்திருந்தார் என்பதால், அவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவறான சமூக வலைதளப் பதிவு போட்டதால்தான் 'ஆதவ் அர்ஜூனா' மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    - தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்



  • Oct 02, 2025 15:52 IST

    கட்டாய கல்வி - மாணவர் சேர்க்கை தொடக்கம்

    மத்திய அரசு நிதி விடுவித்த நிலையில் அக். 6-ஆம் தேதி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையைத் தொடங்குகிறது தமிழ்நாடு அரசு. 
        
    அக். 14-ஆம் தேதி இறுதி மாணவர் பட்டியல் வெளியீடு; அக். 16-ஆம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் வெளியிடப்படும்

     
    - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.



  • Oct 02, 2025 15:50 IST

    தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவித்தது மத்திய அரசு

    கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவித்தது. இதனை அடுத்து, இச்சட்டத்தின் கீழ் 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடங்கியதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 



  • Oct 02, 2025 15:47 IST

    விஜய் திரைப்படத்தின் வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார்- சீமான்

    விஜய் சென்றதால்தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆனால், அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. திரைப்படத்தின் வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார். கூட்டத்தில் கத்தியுடன் புகுந்தவர்கள் தாக்கினார்கள் என்றால், மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்குக்கூட கத்திக் குத்து காயம் இல்லாதது எப்படி?

    சீமான்



  • Oct 02, 2025 15:46 IST

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு 108 சிறப்பு ரயில்கள்

    தீபாவளி பண்டிகையையொட்டி 108 சிறப்பு ரயில்கள்இயக்கப்படும். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜனவரி முதல் மக்களின்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 

    - தென்னக ரயில்வே கூடுதல் பொதுமேலாளர்



  • Oct 02, 2025 14:53 IST

    விஜய்க்கு வந்ததில் இருந்து ஆட்சியின் மீதுதான் மோகம்- திருமாவளவன்

    நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் கடும் அழுத்தம் கொடுத்தனர்; அவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளக்கூடாது என மிகவும் எச்சரிக்கையாகக் கட்சி தொடங்குவதைத் அவர் தவிர்த்துவிட்டார். அவருக்குப் பதவி, அதிகாரம் மீது மோகம் இல்லை; முதலமைச்சராகும் வெறி, வேட்கை இல்லை. அதனால் அவர் அமைதியாக ஒதுங்கிவிட்டார்.

    விஜய்க்கு வந்ததில் இருந்து அதிகாரமும், ஆட்சியின் மீதும்தான் மோகம்; அடுத்த முதலமைச்சராக நாற்காலியில் உட்கார வேண்டுமென்பதுதான் மோகம்; அதற்குக் குறிவைத்து திமுகவைச் சாடுகிறார்.

    திருமாவளவன் திருச்சியில் பேட்டி



  • Oct 02, 2025 14:17 IST

    சிறுத்தை உடலை எவ்வளவுதான் கழுவினாலும்... மோடியை சாடிய பிருந்தா காரத்

    சுதந்திரப் போராட்டத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதை பிரதமர் மாற்றியமைக்க முயற்சிக்கிறார். ஒரு சிறுத்தை, தன் உடலை எவ்வளவுதான் தண்ணீரில் கழுவினாலும் அதன் புள்ளிகளை அழிக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது

    - ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டது குறித்து பிருந்தா காரத்



  • Oct 02, 2025 14:15 IST

    41 பேர் இறப்பில் அரசியல் ஆதாயம் தேட நினைப்பது விஜய்தான்: திருமாவளவன்

    மதியம் 12 மணிக்கு கரூர் வருவதாகச் சொல்லிவிட்டு, இரவு 7.15 மணிக்கு வந்தார்கள். இந்தத் தாமதத்துக்கு யார் காரணம்? வழியில் வாகனத்தை நிறுத்தி நிறுத்தி வரம்பு கடந்து காவல் துறையை சொன்னது?

    மக்கள் வழியில் நின்றால் வாகனத்துக்குள் இருந்தபடியே கைகாட்டலாம்தானே?

    கைக் காட்டுவது கூடாது என்று காவல் துறை அனுமதி இல்லை என்றால், வாகனத்தை நிறுத்தம் செய்ய அனுமதி இருக்காதல்லவா? பின் ஏன் அதை பின்பற்றவில்லை?

    41 பேர் இறப்பில் அரசியல் ஆதாயம் தேட நினைப்பது விஜய்தான்

    திருமாவளவன்



  • Oct 02, 2025 14:12 IST

    விஜய்க்கு எந்தவொரு அக்கரையும் இல்லை: திருமாவளவன்

    கூட்ட நெரிசலுக்கும் வன்முறைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது? யாரோ தூண்டிவிட்டிருந்தால் லத்தி சார்ஜ், துப்பாக்கிச்சூடு நடந்திருக்கும் இல்லையா? அப்படி நடந்திருந்தால் திமுக-வை கைகாட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

    உங்கள் தொண்டர்கள் அளவு கடந்து நெரிசல் மிக்க பகுதியில் 7 மணி நேரத்துக்கு மேல் நின்றது, அதனால் ஒருவர் மீது ஒருவர் ஏறியதும்தானே இந்தக் கொடூர சம்பவத்துக்கு அடிப்படை?

    அப்படியெல்லாம் இல்லாமல் நெரிசலிலும் ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

    இவர்களே ஆம்புலன்ஸை வரவழைத்துவிட்டு, பின் எப்படி 10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்தது என்கிறார்கள்... ஆம்புலன்ஸ் வந்தால்தானே இத்தனை பேர் காப்பாற்றப்பட்டனர்.

    இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஆதாயம் தேடுவதிலேயே குறியாக இருக்கிறார் விஜய். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிப்பதில் அவருக்கு எந்தவொரு அக்கரையும் இல்லை.

    - விசிக தலைவர் திருமாவளவன்



  • Oct 02, 2025 13:53 IST

    ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டுக்கு அஞ்சல் தலை வெளியிடுவதா? - ஸ்டாலின் கண்டனம்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,"நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி" என்று தெரிவித்துள்ளார். 



  • Oct 02, 2025 13:51 IST

    ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க ஜி7 நாடுகள் உடன்பாடு!

    ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக வர்த்தக நடவடிக்கைளை எடுப்போம் என தெரிவித்து ஜி7 நாடுகள் கூட்டறிக்கை. உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



  • Oct 02, 2025 13:04 IST

    ஜனவரியில் கிளம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு? - தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர்  பேட்டி

    கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்  என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். "கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி இன்னும் 2 மாதங்களில் முழுமையாக முடியும். தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  



  • Oct 02, 2025 12:55 IST

    "எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளது ஆர்.எஸ்.எஸ்" - மோடி பேச்சு 

    "வேற்றுமையில் ஒற்றுமை என்பது எப்போதும் இந்தியாவின் ஆன்மாவாக இருந்து வருகிறது. இந்தக் கொள்கை உடைக்கப்பட்டால் இந்தியா பலவீனமடையும்.  தேசமே முதலில் என்ற கொள்கையாலும் ஒரே ஒரு பாரதம், உன்னத பாரதம்' என்ற ஒரு குறிக்கோளாலும் வழிநடத்தப்பட்டு, ஆர்.எஸ்.எஸ் எண்ணற்ற தியாகங்களைச் செய்துள்ளது" என்று ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 



  • Oct 02, 2025 12:49 IST

    அகதிகளுக்கான குடியேற்ற விதிகளை கடுமையாக்க பிரிட்டன் திட்டம்

    அகதிகளுக்கான குடியேற்ற விதிகளை கடுமையாக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. நிரந்தர குடியிருப்புக்கு புதிய திட்டம் உத்தரவாதம் அளிக்காது எனவும் பிரிட்டன் அறிவித்துள்ளது. புலம்பெயர்ந்தவர்களுக்கு குடியேற்றம், குடும்ப மறு இணைவு உரிமைகளை நீட்டிக்காது என்றும் பிரிட்டன் அறிவித்துள்ளது.



  • Oct 02, 2025 12:38 IST

    கரூர் சம்பவம் - ஸ்டாலின் எப்படி காரணமாக முடியும்: ராமதாஸ் கேள்வி 

    "கரூர் சம்பவத்திற்கு முதல்வர் எப்படி காரணமாக முடியும்?" என்று த.வெ.க தலைவர் விஜயின் குற்றச்சாட்டிற்கு ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். 



  • Oct 02, 2025 12:31 IST

    குஜராத் எல்லையோரம் ராணுவ உள்கட்டமைப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான் - ராஜ்நாத் சிங் பரபர தகவல் 

    குஜராத் எல்லையோரம் உள்ள 'சர் கிரிக்' சர்வதேச எல்லைக்கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தனது உள்கட்டமைப்பை அதிகரித்து வருவதாக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பரபரப்புத் தகவல் அளித்துள்ளார். பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால், இந்தியா தீர்க்கமான பதிலடியை கொடுக்கும் என்றும் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • Oct 02, 2025 12:00 IST

    கார்கேவிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

    பெங்களூருவில் சிகிச்சை பெறும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசினேன். அவரது உடல்நிலை | குறித்து விசாரித்தேன், விரைவில் குணமடைய வாழ்த்தினேன்; அவரது தொடர்ச்சியான நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 



  • Oct 02, 2025 11:55 IST

    பாஜக பிடியில் விஜய்?: நயினார் பதில்

    பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய், எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? பாஜக பிடியில் விஜய் இருப்பதாக திருமாவளவன் முன்வைத்த விமர்சனத்துக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். 



  • Oct 02, 2025 11:38 IST

    விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? - திருமாவளவன்

    கரூர் துயர சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? தனது கொள்கை எதிரி பாஜக என விஜய் கூறிவந்த நிலையில் அவரை பாதுகாக்க பாஜக முன்வருகிறது; அவரது சாயம் வெளுத்துப்போய்விட்டது  என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 



  • Oct 02, 2025 11:30 IST

    கரூரில் நடந்தது போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படாமல் அரசியல் கட்சிகள் பார்த்துக் கொள்ள வேண்டும் - ராமதாஸ் பேட்டி

    கரூரில் நடந்தது போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படாமல் அரசியல் கட்சிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு உயிர் கூட பலியாகக்கூடாது; அதற்கு காவல்துறை பணியாற்ற வேண்டும் என்று தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். 



  • Oct 02, 2025 11:26 IST

    பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோனை

    பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோனை நடத்தி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் காணொளி வாயிலாக டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார்.



  • Oct 02, 2025 10:56 IST

    ஆர்எஸ்எஸ் பேரியக்கம் வரலாற்று தாக்கம் - நயினார் நாகேந்திரன்

    மக்கள் பணியை மகேசன் ஆணையாக ஏற்று உழைக்கும் ஆர்எஸ்எஸ் பேரியக்கம் ஒரு வரலாற்று தாக்கம் இன்று நூற்றாண்டு விழா காணும் ஆர்எஸ்எஸ் நாம் போற்றி பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 



  • Oct 02, 2025 10:55 IST

    பாமக மாநில இளைஞரணி தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமனம் - ராமதாஸ் அறிவிப்பு

    பாமக மாநில இளைஞரணி தலைவராக தமிழ்க்குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்க்குமரன் ஜி.கே.மணியின் மகன் ஆவார். நியமன உத்தரவை தமிழ்க்குமரனிடம் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி வழங்கினார்.



  • Oct 02, 2025 10:55 IST

    ஒற்றுமையே நமது வலிமை - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

    தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; ஒற்றுமையே நமது வலிமை; ஆபரேஷன் சிந்தூர் ஒரு வெற்றிகரமான நடவடிக்கை. இந்தியாவில் சட்டம் ஒழுங்கை குலைக்க நடைபெறும் முயற்சிகள் கவலை அளிக்கின்றன. அந்நிய சக்திகள் ஆட்சி மாற்றங்களை உருவாக்குகின்றன; சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும். மக்கள் நலனை புறக்கணிக்கும் அரசாங்கம் கோபத்திற்கு ஆளாக நேரிடும். மக்களுக்கு உதவும் வகையில் கொள்கைகளை அரசாங்கம் வகுக்க வேண்டும். அராஜகங்களும் வன்முறைகளும் ஒருபோதும் நல்ல முடிவுகளை தராது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். 



  • Oct 02, 2025 10:39 IST

    ஜி.கே.மணி மகனுக்கு இளைஞரணி தலைவர் பதவி?

    ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு மாநில இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட வாய்ப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது. 



  • Oct 02, 2025 10:33 IST

    விஜயின் பாதுகாப்பில் குறைபாடா? அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்பு

    விஜயின் பாதுகாப்பில் குறைபாடா? Y பிரிவினரின் பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டதாக தகவல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு என நீதிமன்றத்தில் தெரிவித்த பொதுச் செயலாளர் ஆனந்த்; விஜயின் பாதுகாவலர்கள் எண்ணிக்கை விரைவில் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 



  • Oct 02, 2025 10:20 IST

    புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு

    புதுச்சேரியில் நாளை (03.10.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை தொடர் விடுமுறையை அடுத்து நாளையும் புதுச்சேரியில் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Oct 02, 2025 10:12 IST

    மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை

    மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 



  • Oct 02, 2025 10:08 IST

    ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040க்கு விற்பனை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.10,880க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.163க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



  • Oct 02, 2025 10:06 IST

    காந்தி உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை

    மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 



  • Oct 02, 2025 09:32 IST

    காந்தி ஜெயந்தி - பா.ஜ.கவினர் மரியாதை

    இன்று காலை 10:30 மணி அளவில் தமிழக பாஜக மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன், முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணை தலைவர் திரு கரு நாகராஜன், மாநில செயலாளர், திரு கராத்தே தியாகராஜன் கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அண்ணல் காந்தி அடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.  தொடர்ந்து அருகாமையில் இருக்கும் காமராஜ் நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்து கர்மவீரர் காமராஜர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். 

     



  • Oct 02, 2025 09:22 IST

    புதின் இந்தியா வருகை

    இந்தியாவில் வரும் டிசம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில்  ரஷ்ய அதிபர் புதின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.



  • Oct 02, 2025 09:21 IST

    டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் திருமணம்?

    ஹாலிவுட்நடிகர்டாம்க்ரூஸூக்கும்நடிகைஅனாடிஅர்மாஸுக்கும்விண்வெளியில்திருமணம்நடைபெறஇருப்பதாகதகவல்வெளியாகியுள்ளது. இருவர்விமானத்தில்ஸ்கைடைவிங்செய்தபடிதிருமணம்செய்துகொள்ளஇருப்பதாகவும்இணையத்தில்செய்திகள்பரவிவருகிறது.

     



  • Oct 02, 2025 09:19 IST

    காந்தி ஜெயந்தி - முர்மு மரியாதை

    மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மலர்தூவி மரியாதை செய்தார்.



  • Oct 02, 2025 09:06 IST

    விஜயதசமி - அரசு பள்ளிகள் இன்று திறப்பு

    தமிழகத்தில் இன்று அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



  • Oct 02, 2025 08:38 IST

    கார் மோதி தீப்பிடித்து 3 பேர் உயிரிழப்பு

    சென்னையில்இருந்துமூணாறுக்குசுற்றுலாசென்றபோதுவிக்கிரவாண்டிஅருகேசாலைத்தடுப்பில்கார்மோதிதீப்பற்றியதில் 3 பேர்உயிரிழந்தனர். கார்தீப்பற்றி 3 பேர்உயிரிழந்தநிலையில்மேலும்இருவர்காயங்களுடன்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

     



  • Oct 02, 2025 08:07 IST

    குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்

    தூத்துக்குடிகுலசேகரன்பட்டினத்தில்முத்தாரம்மன்கோயில்தசராதிருவிழாவின்சிகரநிகழ்ச்சியானசூரசம்ஹாரம்இன்றுநள்ளிரவுகோலாகலமாகநடைபெறுகிறது. இன்றுஇரவுசிறப்புஅலங்காரபூஜைக்குபின்இரவு 12 மணிக்குமகிஷாசூரசம்ஹாரம்நடைபெறும்.

     



  • Oct 02, 2025 08:05 IST

    காந்தி நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

    மகாத்மாகாந்தியின்பிறந்தநாளையொட்டிடெல்லிராஜ்காட்டில்உள்ளஅவரதுநினைவிடத்தில்பிரதமர்நரேந்திரம்மோடிமரியாதைசெலுத்தினார்.

     



news updates Tamilnadu News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: