சென்னையில், போஜராஜன் நகரில் சுரங்கப் பாதையில் பணிகள் நடைபெறுவதால், 4 மற்றும் 5 மண்டலங்களுக்கு கிழே உள்ள இடங்களுக்கு அக்டோபர் 16 முதல் 18 வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
ராயபுரம் பகுதியில் உள்ள போஜராஜன் நகரில், சுரங்கப்பாதையில் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் அப்பகுதியில் உள்ள குடிநீர் இணைப்புகளை மாற்ற முடிவு செய்துள்ளது.
இதனால் சென்னையின் மண்டலம் 4 மற்றும் 5 -யின் கீழ் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். அக்டோபர் 16 காலை 10 மணி முதல் அக்டோபர் 18 காலை 6 மணி வரை தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான நீரை முன்பே சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“