ராணுவ போர் கப்பலைக் காண 3 நாட்களில் குவிந்த 70 ஆயிரத்திற்கும் மேலான மக்கள்

ராணுவ போர் கப்பல்களைக் காண அலை மோதிய மக்கள் கூட்டம். மூன்று நாட்களாக வெயில் என்றும் பாராமல் குவிந்த மக்கள் வெல்லத்தில் திணறியது சென்னை துறைமுகம்.

சென்னை துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர் கப்பலைக் காண கூட்டம் அலை மோதியது. இதில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் போர் கப்பலைக் கண்டனர்.

chennai warship

People visit Army Warship in Chennai port

மாமல்லபுரம், திருவிடந்தையூரில் கடந்த ஏப் 11ம் தேதி ராணுவ தளவாடக் கண்காட்சி துவங்கியது. இதனை பொதுமக்கள் பலர் நேரில் சென்று பார்த்தனர். இதனையொட்டி சென்னை துறைமுகத்தில் ராணுவத்தைச் சேர்ந்த 4 போர் கப்பல்கள் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்தக் கப்பல்கள் ஏப் 13ம் தேதி முதல், காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை காண முடியும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தக் கப்பலை காண நேற்றே கடைசி நாள் என்பதால் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே 30 ஆயிரம் பேர் குவிந்தனர். இது போல், 3 நாட்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கப்பலை காணக் குவிந்தனர்.

கப்பல்களைப் பார்வையிட வரும் பொதுமக்களுக்காக தீவுத்திடல் முதல் துறைமுகம் வரை இலவச பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. போர்க்கப்பல்களை பார்வையிட மேலும் 2 நாட்கள் அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

×Close
×Close