Advertisment

கோவிட்-19 பாஸிட்டிவ் என தவறாக ரிசல்ட் கொடுத்த பரிசோதனை மையத்துக்கு சீல் வைப்பு

சென்னையில் 44 பேருக்கு கோவிட்-19 தொற்று இருக்கிறது என்று தவறாக பரிசோதனை முடிவுகளைத் தெரிவித்த வடபழனியில் உள்ள தனியார் பரிசோதனை ஆய்வகத்தை சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை மூடி சீல் வைத்தது.

author-image
WebDesk
New Update
Chennai private lab sealed, chennai lab sealed, lab sealed for false positive results, கொரோனா வைரஸ், கோவிட்-19 பாஸிட்டிவ், தவறாக ரிசல் கொடுத்த ஆய்வகத்துக்கு சீல் வைப்பு, chennai corporation officials actions, chennai corporation, சென்னை, கொரோனா பரிசோதனை, covid-19, false covid-19 positive results, health officers, chennai, coronavirus

சென்னையில் 44 பேருக்கு கோவிட்-19 தொற்று இருக்கிறது என்று தவறாக பரிசோதனை முடிவுகளைத் தெரிவித்த வடபழனியில் உள்ள தனியார் பரிசோதனை ஆய்வகத்தை சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை மூடி சீல் வைத்தது. ஆனால், அந்த பரிசோதனை மையம், மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டதை மறைத்து மீண்டும் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

Advertisment

சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்தில் அக்டோபர் 6ம் தேதி ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்குப் பிறகு, கோவிட்-19 பாஸிட்டிவ் என்று அறிவிக்கப்பட்ட 139 மாதிரிகளை அனுப்புமாறு சுகாதாரத்துறை பரிசோதனை மையத்திடம் கேட்டது. ஆனால், பரிசோதனை மையத்தில் இருந்து 128 மாதிரிகள் மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதில் மீதமுள்ள 1 மாதிரி நெகட்டிவ் என்றும் மற்ற 10 மாதிரிகள் கவனக்குறைவாக பாஸிட்டிவ் என்று அறிவிக்கப்பட்டதால் அது நிராகரிக்கப்பட்டது.

ஆனால், சுகாதாரத்துறை 128 மாதிரிகளில், 84 மாதிரிகளில் மட்டுமே கோவிட்-19 தொற்று உள்ளதைக் கண்டறிந்தனர். அந்த தனியார் பரிசோதனை மையம், 34 சதவீதம் நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக பொய்யாகக் கூறி மன அழுத்தத்தை ஏறபடுத்தியுள்ளனர்” என்று சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் கூறினார்.

அந்த 44 நோயாளிகளுக்கு அவர்களின் நிலை குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து கோடம்பாக்கம் மண்டலத்தைச் சேர்ந்த சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் மற்றவர்களிடையே பீதியை உருவாக்க விரும்பவில்லை. எனவே நாங்கள் அவர்களுக்கு இதைப் பற்றி அறிவிக்கவில்லை. நோயாளிகளின் விவரங்களை நாங்கள் கண்டுபிடித்து அவர்களை கண்காணித்து வருகிறோம்” என்று என்று கூறினார்.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வநாயகம், தனியார் பரிசோதனை மையங்களில், அதிக கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கண்டறியப்பட்டதையடுத்து அங்கே கொரோனா வைரஸ் பரிசோதனை தரக்கட்டுப்பாடு சோதனை செய்யப்பட்டதாக கூறினார்.

இது குறித்து சென்னை மாகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் ஒருவரு கூறுகையில், சென்னையில் மேலும் 5 பரிசோதனை மையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் ஏன் தவறாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவுகளை அளித்தார்கள் என்று தெரியவில்லை.

இது குறித்து மண்டல அதிகாரி ஒருவர், முதல்கட்ட விசாரணைகல் காப்பீட்டு முகவர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களிடையே ஒரு கூட்டு இருப்பதாக சுட்டிக்காட்டினார். மேலும், அவர், கோவிட் தொற்று ரிசல்ட் உள்ளவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில்கூட காப்பீட்டாளர்களிடமிருந்து மருத்துவ செலவுகளைக் கோரலாம்” என்று கூறினார். மாதிரிகளைக் கையாள்வதில் ஏற்படும் கவனக்குறைவும் மற்றொரு காரணம் என்று கூறினார்.

கார்ப்பரேஷன் உடல் வெப்பநிலையை திரையிடும் மையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாஸிட்டிவ் சோதனை செய்த ஒரு நாள் கழித்து ஒரு தனியார் ஆய்வகத்தில் செய்த சோதனையில் நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவு வந்ததாக சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

சென்னையில் மொத்தம் 42 அரசு அங்கீகாரம் பெற்ற கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்கள் ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு 300 மாதிரிகளை சோதனை செய்வதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

- நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment